தனது ஹோட்டல்களில் பணிபுரியும் 350 ஊழியர்களுக்கு சூரி செய்துள்ள உதவி.

0
14806
soorihotel
- Advertisement -

தற்போது நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு உலக நாடுகளை பாதித்த இந்த வைரஸ் தற்போது இந்தியாவையும் பாதித்துள்ளது. அதே போல தமிழகத்திலும் இதன் பாதிப்பு பரவி வருகிறது. ஆரம்பத்தில் இந்த வைரஸின் பாதிப்பு தமிழக்தில் குறைவாக காணப்பட்டு வந்த நிலையில் அப்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வேளையில், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். மேலும், பலரும் வேலை இல்லாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தனது ஹோட்டலில் பணி புரிந்து ஊழியர்கள் குறித்து சூரி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

-விளம்பரம்-
சூரியின் ஹோட்டலை திறந்து வைக்க ...

- Advertisement -

சினிமாவில் உள்ள பல்வேறு பிரபலங்களும் நடிப்பையும் தாண்டி தனிப்பட்ட முறையில் எதாவது தொழிலை செய்து வருவது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. அதிலும் பெரும்பாலான நடிகர் நடிகைகளின் இரண்டாவது தொழில் ஹோட்டல் அல்லது உணவகமாக தான் இருக்கும். தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு பிரபலங்களுக்கு சொந்தமாக சொகுசு ஹோட்டல்கள் கூட இருக்கிறது. அந்த வகையில் சூரியும் தனக்கென்று ஒரு ஹோட்டல் தொழிலை வைத்திருக்கிறார்.

கடந்த 2017ம் ஆண்டு மதுரை காமராஜர் சாலையில், அம்மன் எனும் பெயரில் ஹோட்டலை, நடிகர் சூரி திறந்தார். வியாபாரம் அமோகமாக நடைபெற, மதுரையின் மற்ற பகுதிகளான மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை பகுதிகளிலும் ஹோட்டல்களை திறந்து வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். சைவ ஹோட்டல்களை மட்டும் திறந்து வந்த நடிகர் சூரி சமீபத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் அம்மன் உணவகம் என்ற அசையவே உணவகத்தை திறந்து வைத்தார்.

-விளம்பரம்-
Amman Restaurant - Posts | Facebook

இதனை நடிகர் சூரியின் நண்பரும் நடிகருமான சிவ கார்த்திகேயன் திறந்து வைத்தார். இந்த நிலையில் தனது பல்வேறு ஹோட்டலில் பணியாற்றி வரும் உழியர்களுக்கு விடுப்பு மற்றும் சம்பளத்தையும் கொடுத்துள்ளார் நடிகர் சூரி, இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் நடத்தி வரும் ஓட்டல்களில், மொத்தம் 350 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் விடுமுறை கொடுத்து விட்டேன்.

அவர்களின் சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யாமல், முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டேன். இதேபோல் வறுமையில் வாடும் நாடக நடிகர்-நடிகைகளுக்கு நடிகர் சங்கம் மூலம் ரூ.1 லட்சம் கொடுத்து இருக்கிறேன். மூன்றாம் உலகப்போர் வந்தது போல் ஒரு அச்சத்தை கொரோனா ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பல்வேறு நடிகர்கள் கொரோனாவிற்காக மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ், தனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரைக்கும் சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து இருந்தார் அதே தனது பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீடு இன்றி தவிக்கும் 11 பேருக்கு பாண்டிச்சேரியில் உள்ள தனது தோட்டத்தில் தங்க இடவசதி ஏற்படுத்தி கொடுத்திருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-1-1024x680.jpg

அதே போல பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கொரோனா பாதிப்பில் அரசுக்கு உதவும் வகையில் தனது வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறி இருந்தார். அதே போல நடிகர் கமல்ஹாசனும் தனது வீட்டை அரசு அனுமதித்தால் மருத்துவமனையாக பயன்படுத்திகொள்ள தயார் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement