அன்னிக்கு நான் chance கேட்டு மயங்கி விழுந்த இடத்துல இன்னிக்கி என்னோட Office – சூரி சொன்ன நெகிழ்ச்சியான ஸ்டோரி

0
505
- Advertisement -

அப்போது நான் வாய்ப்பு தேடி மயங்கி விழுந்த இடம் தான் இப்போது என்னோட அலுவலகம் என்று நெகிழ்ச்சியுடன் நடிகர் சூரி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
soori

தற்போது சூரி அவர்கள் விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அது போல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யூத்தியை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். மேலும், தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

விடுதலை படம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி படத்தில் போராளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, சேத்தன், தென்றல் ரகுநாதன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

soori

படத்தின் விமர்சனம்:

இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு இந்தப் படத்தில் சூரியினுடைய நடிப்பை பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் கதாநாயகனாக சூரி நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சூரி அவர்கள் இனிமேல் ஹீரோவாக நடிப்பாரா? காமெடியனாக நடிப்பாரா? என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

சூரி அளித்த பேட்டி:

இந்த நிலையில்சமீபத்தில் சூரி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், நான் சினிமாவுலகில் நுழைய ஆரம்பகாலத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் ஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்தின் ஆடிஷனுக்கு சென்றிருந்தேன். அங்கு நிறைய கூட்டமாக இருந்தது. அப்போது நான் சாப்பிடாமல் போனதால் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். பின் என்னை உட்கார வைத்து எந்த ஊர் என்றெல்லாம் விசாரித்தார்கள். நான் மதுரையில் சினிமா வாய்ப்புக்காக வந்திருக்கிறேன் என்று சொன்னேன். அதன் பின்னர் சுசீந்திரன் அண்ணன் அவர்களின் வெண்ணிலா கபடி குழு படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.

அலுவலகம் குறித்து சொன்னது:

பிறகு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் எனக்காக ஒரு ஆபீஸ் தேவைப்பட்டது. அப்போது அந்த ஆபீஸ் வாங்க போகும்போது நான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தேன். என்னுடைய மேலாளரை அனுப்பி வைத்தேன். ஆனால், கடைசி நேரத்தில் என்னுடைய மனைவி அந்த இடம் சரியாக வராது என்று கூறினார். பின் நான் இரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பும் போது என்னுடைய மேலாளர் உடன் நான் அந்த இடத்திற்கு செல்ல செல்ல எனக்கு ஏதோ ஒரு பழைய மலரும் நினைவுகள் வந்தது. கடைசியில் அந்த கட்டிடத்திற்கு முன்பு நின்று இது தான் அந்த ஆபீஸ் என்று சொன்னபோது கலாபக் காதலன் படம் நினைவுக்கு வந்தது. என்ன விலை சொல்கிறார்கள் என கேட்டுவிட்டு உடனே வாங்குங்கள் என்று சொன்னேன். எல்லாம் முடிந்த பிறகு என்னுடைய மனைவியிடம் உண்மையை சொன்னேன். அவள் கண்கலங்கி விட்டாள் என்று கூறினார்.

Advertisement