சூரியா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க – அவரே வெளியிட்ட வீடியோ.

0
1322
soori
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகரான சூரி ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதை வைத்துகொண்டே இது வரை பல படங்களில் இவரது காமெடியை ஹிட் அடிக்க வைத்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி. ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது, இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார் சூரி. பிரபு தேவா நடித்த ‘நினைவிருக்கும் வரை ‘ ,’ஜேம்ஸ் பாண்டு’ தீபாவளி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி.

இதையும் பாருங்க : புதுப்பேட்டை படத்தில் அந்த ஹீரோயின் ரோலில் நான் தான் கமிட் ஆனேன் – அப்புறம் அந்த காரணத்தால் விலகிட்டேன் – காயத்ரி ரகுராம்

- Advertisement -

மேலும், சினிமாவில் வருவதற்கு முன்பாக திருமதி செல்வம், புஷ்பாஞ்சலி, மைதிலி, ஜென்மம் எக்ஸ் போன்ற பல சீரியல்களில் கூட நடித்துள்ளார் சூரி. நடிகர் சூரி 20 வருடங்களுக்கு முன் சூரி, காமெடி கிங் கௌண்டமணி படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2000 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி, மந்த்ரா, செந்தில் கௌண்டமணி போன்ற பலர் நடித்த ‘கண்ணன்’ வருவான் என்ற படத்தில் தான் நடிகர் சூரி ஒரு சிறு காட்சியில் நடித்துள்ளார். நடிகர் சூரிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் ஆகிவிட்டது.

திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகளும் மற்றும் ஒரு மகனும் பிறந்தனர். பெரும்பாலும் சூரி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் அவரது குடும்ப நபர்கல் யாரையும் அழைத்து வருவது இல்லை. ஆனால், இந்த லாக் டவுன் சமயத்தில் தனது பிள்ளைகளுடன் சேர்ந்து பல வீடியோகளை பதிவிட்டார் சூரி. இந்த நிலையில் நடிகர் சூரி தனது மகன், மகளுடன் உட்கார்ந்து திருமண போட்டோவை வைத்து செய்யும் கலாட்டா வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது

-விளம்பரம்-
Advertisement