புதுப்பேட்டை படத்தில் அந்த ஹீரோயின் ரோலில் நான் தான் கமிட் ஆனேன் – அப்புறம் அந்த காரணத்தால் விலகிட்டேன் – காயத்ரி ரகுராம்

0
1402
gayathri
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனின் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். 

-விளம்பரம்-

இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் என் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது இவர் தனது 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார் இவர் 2002 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் ஸ்டைல் பரசுராம் விசில் விகடன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார். வயதும் உடல் எடையும் கூடியதால் இவருக்கு சினிமாவில் நுழைந்த சிறிது காலத்திலேயே கதாநாயகி ஆகும் வாய்ப்பு கைநழுவி போனது.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின்னும் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட மனிஷா யாதவ்.

- Advertisement -

அதன் பின்னர் வானம் வைராஜாவை இது என்ன மாயம் போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார் இறுதியாக தமிழில் கடந்த ஆண்டு வெளியான அருவம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் நடுவராகவும் பங்கேற்று வந்தார் காயத்ரி ரகுராம். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காயத்ரி, சினிமாவில் தான் தவறவிட்ட வாய்ப்பு குறித்து பேசியுள்ளார்.

வீடியோவில் 6 : 55 நிமிடத்தில் பார்க்கவும்

காயத்ரி 16வயது இருக்கும் போதே ‘சார்லி சாப்ளின்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானாராம். அதன் பின்னர் இவருக்கு புதுப்பேட்டை படத்தில் ஸ்னேகா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். அதற்கு டெஸ்ட் ஷூட் எல்லாம் கூட எடுத்த நிலையில் பின்னர் அந்த படம் 6 மாதம் கழித்து தான் எடுக்கப்படும் என்று செல்வராகவன் சொன்னதால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாராம் காயத்ரி. அவ்வளவு ஏன் யூத் படத்தில் வந்த ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு சிம்ரனுக்கு முன் இவருக்கு தான் வாய்ப்பு வந்ததாம்.

-விளம்பரம்-
Advertisement