அட, திருமதி செல்வம் தொடரில் சூரி நடிச்சிருக்காருப்பா.! வெளியான புகைப்படங்கள்.!

0
1470
Actorsoori
- Advertisement -

காமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக்,சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் க லாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம் அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயகின்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

-விளம்பரம்-
Soorithirumathiselavam

தமிழில் உள்ள பெரும்பான்மையான நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி. ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது, இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி.

இதையும் பாருங்க : அஜித், விஜயுடன் நடித்த சுவலக்ஷ்மி இப்போ என்ன பன்றாங்க தெரியுமா.! 

- Advertisement -

நடிகர் சூரி ஒரு முன்னணி காமெடியனாக வளம் வருவதற்கு முன்பாக சிறு சிறு கதாபாத்திரத்தில் முகம் காண்பித்து வந்தார். பிரபு தேவா நடித்த ‘நினைவிருக்கும் வரை ‘ ,’ஜேம்ஸ் பாண்டு’ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி. மேலும், சினிமாவில் வருவதற்கு முன்பாக திருமதி செல்வம், புஷ்பாஞ்சலி, மைதிலி, ஜென்மம் எக்ஸ் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

actorSoori
soori

இதில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ சீரியலில் மெக்கானிக் கடையில் செல்வத்தின் உதிவியாளராக நடித்திருப்பார் சூரி. இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து சூரி ‘திருமதி செல்வம்’சீரியலில் நடித்த சில புகைப்படங்கள் தற்போது நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

-விளம்பரம்-
Advertisement