அஜித், விஜயுடன் நடித்த சுவலக்ஷ்மி இப்போ என்ன பன்றாங்க தெரியுமா.!

0
1073
Suvalakshmi

90 ஸ் காலகட்ட சினிமா ரசிகர்கள் நடிகை சுவலட்சுமி மறக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை. 1995ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான ‘ஆசை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை சுவலட்சுமி. முதல் படமே தல படம் என்று ஒரு சூப்பரான என்ட்றியுடன் தனது சினிமா பயணத்தை துவங்கினார்.

ஆசை திரைப்படத்திற்கு முன்பாகவே பெங்காலியில் வெளியான ‘ஓட்டுறான் ‘ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னரே தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர், பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வந்தார் . அஜித்தை அடுத்து விஜய்யுடன் ‘லவ் டுடே படத்திலும் நடித்திருந்தார்.

- Advertisement -

ஆண்டுகள் செல்ல செல்ல பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியல் பக்கம் திரும்பினார். பின்னர் சன் தொலைகாட்சி ஒளிபரப்பான சூலம் தொடரிலும் நடித்தார். பெற்றது இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நதிக்கரையிலே என்ற படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதுவே இவரது கடைசி படமும் கூட அந்த படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதினையும் பெற்றார்.

அந்த படத்திற்கு பின்னர் திருமணம் செய்துகொண்டு கலிபோர்னியாவில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பின்னரும் இவரைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்தது. இயக்குனர் ராஜா இயக்கிய ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் கூட இவரை நடிக்க வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், திருமணமான பின்னர் நடிக்கவே மாட்டேன் என்று கட் அண்ட் ரயிட்டாக கூறிவிட்டார் சுவலட்சுமி. தற்போது தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement