‘அப்போ நாங்க SKவை பார்க்கல, அப்படியே’- அமரன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகர் ஸ்ரீகுமார்

0
244
- Advertisement -

சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் ‘அமரன்’ படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்திருக்கும் செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்று இருக்கிறது. தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கும் இப்படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. தற்போது படத்தின் பிரமோஷன் வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

ஸ்ரீகுமார் பேட்டி:

இந்நிலையில் அமரன் படத்தில் நடித்திருக்கும் நடிகர் ஸ்ரீகுமார் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், வாய்ப்புகளைக் கஷ்டப்பட்டு தேடுகிற ஆள் நான். நல்ல படங்கள் நல்ல கம்பெனியில கிடைக்கிறது ரொம்ப பெரிய விஷயம். சின்ன வயசுல இருந்தே ராணுவத்துக்கு போகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, நான் பத்தாம் வகுப்பு முடிக்காததுனால ராணுவத்துக்குப் போக முடியல. ஆனால், எனக்குள்ள ராணுவம் மேல ஒரு ஆசை இருந்துட்டே தான் இருந்தது. அப்போதான், ‘அமரன்’ படம் உருவாக போகுதுன்னு கேள்விப்பட்டு, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இடம் வாய்ப்பு கேட்டேன்.

அமரன் படம் குறித்து:

அதற்கு அவர், ‘இந்த படத்துல தமிழ் ஆட்கள் ரொம்பவே குறைவுதான்’ என்று சொல்ல, பரவாயில்லை எனக்கு வாய்ப்பு கொடுங்க என்று கேட்டேன். அப்படி கிடைத்த வாய்ப்புதான் அமரன். இந்த படத்தை உண்மை சம்பவத்தில் இருந்து ராஜ்குமார் அப்படியே எடுத்திருக்கிறார். நாங்க எல்லோரும் அந்த உண்மை சம்பவத்தில் இருந்த நபர்களோட கதாபாத்திரங்களாகவே நடித்திருக்கிறோம். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எனக்கு டெலிவிஷன்ல இருந்தே தெரியும். அவர் இயக்கிய ரங்கூன் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன். இருந்தும் சில ஆடிஷன்கள் நடத்தி தான் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தார்கள்.

-விளம்பரம்-

சூட்டிங் அனுபவங்கள்:

தொடர்ந்து அவர், காஷ்மீருக்கு கனெக்டிங் விமானத்தில் தான் போகணும். முதல் நாளே அதிகமான குளிர் இருந்தது. எனக்கு இரவு நேரங்களில் தனியாக தூங்குவதற்கு பயமாக இருந்தது. ஒரு முறை இயக்குனரிடம், ‘இரவு நேரத்தில் பக்கத்துல யாரோ சவுண்ட் கொடுக்குற மாதிரியே இருக்குன்னு ‘ சொன்னேன். அதற்கு அவரும், ‘இங்கு அதிகப்படியான இறப்புகள் நடப்பதால் அப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டார். இந்த படத்துல நடிச்ச ஒரு காஷ்மீர் காரர் தான் என்னையும் எஸ்கே சாரையும் ஊர் சுத்தி காட்ட கூட்டிட்டு போவாரு. ஒரு தடவை பக்கத்துல பக்கத்துல என்று சொல்லி 14 கிலோமீட்டர் அவர் எங்களை நடக்க வச்சுட்டாரு. இருந்தாலும், எஸ்கே சார் அவர் மேல கோபமே படல.

சிவகார்த்திகேயன் குறித்து:

மேலும், முதல் நாளே போருக்கு போகிற காட்சியை தான் எடுத்தாங்க. அந்த உடையை போட்டதும் உண்மையான ராணுவ வீரர் மாதிரி நான் உணர்ந்தேன். சிவகார்த்திகேயன் சார் அந்த உடையை போட்டதும் அப்படியே முகுந்த் வரதராஜன் ஆகவே மாறிட்டாரு. சிவகார்த்திகேயன் சார் அப்ப இருந்த மாதிரியே தான் இப்பவும் இருக்காரு. சீரியல்ல ஒரு நடிகர் கிட்ட பேசும் போது மரியாதைக்காக ஹலோ சொன்னால் கூட, திரும்பவும் எதுவும் சொல்ல மாட்டாங்க. ஆனால், இவர் தினமும் வந்து கட்டிப் பிடிச்சு மரியாதை கொடுத்தார். 15 வருஷத்துக்கு முன்னாடி எப்படி பார்த்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறார். அந்த குணத்தால் தான் அவர் மென்மேலும் வளர்ந்துகிட்டே இருக்காரு என்று ஸ்ரீ நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார் .

Advertisement