நடிகர் ஸ்ரீகாந்த்தின் மகன் மற்றும் மகளா இது ? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

0
1414
srikanth

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஸ்ரீகாந்த். கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ரோஜா” கூட்டம் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே பல பெண் ரசிகைகள் மத்தியில் சாக்லேட் பாய் பட்டத்தை பெற்றரவர். குறிப்பாக சொல்லப்போனால் அரவிந்த் சாமி, அப்பாஸ், மாதவன் போன்ற நடிகர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்ற பெயரெடுத்த நடிகர்களில் நடிகர் ஸ்ரீகாந்தும் ஒருவர்.

ரோஜா கூட்டம் படத்திற்கு பிறகு பல தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். தமிழில் சாக்லேட் பாய் என்ற பெயரை எடுத்ததால் அந்த பெயரை மாற்ற பல வித்தியாசமான கதை களத்தில் நடித்து வந்தார். இருப்பினும் இவர் நடித்த எந்த படமும் பெயர் சொல்லும் அளவிற்கு ஓடியது இல்லை. நடிகை ஸ்னேஹாவுடன் பல ஆண்டுகள் காதல் கிசுகிசுக்களில் விழுந்து வந்த ஸ்ரீகாந்த், பின்னர் 2007 ஆம் ஆண்டு வந்தனா என்ற தெலுகு குடும்பத்தை சார்ந்த வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : முதன் முறையாக விவாகரத்து குறித்து பேசிய அமலா பால் – இவ்ளோ பிரச்சனையா ?

- Advertisement -

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகனும் , மகளும் பிறந்தனர். சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் இவர் இவர் நடித்த மிகப்பெரிய படம் என்றால் அது விஜய்யுடன் நடித்த ‘நண்பன்’ படம் மட்டும் தான். கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீகாந்த் சினிமாவில் தான் தவறவிட்ட வாய்ப்பு குறித்து பேசி இருந்தார்.

அதில், அதில் சினிமாவில் அதிகபட்ச இழப்புகள் ஒருவருக்கு ஏற்பட்டு இருக்கும் என்றால் அது எனக்கு தான் இருக்கும் என்று நினைக்கிறேன்என்னுடைய முதல் படம் காதல் வைரஸ் படமாக இருந்திருக்க வேண்டும் ஒரு வருடம் அதற்காக நான் பயிற்சி எடுத்து இருக்கும்போது அந்த படத்தில் இருந்து நான் வெளியேறிய போது நான் மிகவும் உடைந்து போனேன். அதன் பின்னர் பாரதிராஜாவால் நான் அறிமுகமாகி இருக்கவேண்டும். அது வேறு ஒரு காரணத்தினால் மிஸ் ஆகிவிட்டது. அதன் பின்னர் படத்தில் நான் நடிக்க வேண்டி இருந்தது அதுவும் மிஸ் ஆகிவிட்டது இவையெல்லாம் தாண்டி தான் நான் ரோஜாக்கூட்டம் படத்தில் நடித்தேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement