நதியா உடனான காதல் கிசுகிசு பற்றி நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் சுரேஷ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 80 காலகட்டத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சுரேஷ். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சமையலில் பட்டம் வென்றவர். இவர் பன்னீர் புஷ்பங்கள் என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு என பலப்படங்களில் நடித்திருந்தார். இவர் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இடையில் சில காலங்கள் இவர் நடிக்காமல் இருந்தாலும் மீண்டும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
சுரேஷ் பற்றிய தகவல்:
அது மட்டும் இல்லாமல் அந்த காலகட்டத்தில் கோலிவுட்டின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் சுரேஷ்.
இவர் நதியா, ரேவதி போன்ற நடிகைகளுடன் பல படங்களில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் அந்த நடிகைகளுடன் ஒப்பிட்டு இவரை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்தது. குறிப்பாக, நடிகை நதியாவை சுரேஷ் காதலிப்பதாக நிறைய செய்திகள் வந்திருந்தது.
சுரேஷ் பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சுரேஷ், என்னைப் பற்றி நிறைய காதல் கிசுகிசுக்கள் வந்தது உண்மைதான். அதில் என்னையும் நதியாவையும் சேர்த்து வைத்து நிறைய எழுதி இருந்தார்கள். ஆனால், உண்மையில் நதியா என்னுடைய பெஸ்ட் பிரண்ட். அவருடன் நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். அவருக்கும் எனக்கும் கிசுகிசு இருந்தது சொல்வதற்கு காரணம் நான் அவருடன் நிறைய படங்கள் பண்ணது தான்.
சர்ச்சைகளுக்கு விளக்கம்:
அவருடைய காதலர் பெயரும் என்னுடைய பெயரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். அதனால்தான் அப்படியெல்லாம் எழுதி இருந்தார்கள். நதியாவின் காதலர் பெயர் சிரிஷ். என்னுடைய பெயர் சுரேஷ். அவர் சூட்டிங்கில் இருக்கும்போது எப்போதுமே தன்னுடைய காதலனுடன் தான் போனில் பேசிக் கொண்டே இருப்பார். அவரையே நதியா திருமணமும் செய்து கொண்டார். எனக்கும் நதியாவுக்கும் இடையே காதல் வர வாய்ப்பே இல்லை. காரணம் நான் அவருக்கு தம்பி மாதிரி.
வாட்ஸ்அப் குரூப்:
நதியா எப்போதுமே தன்னுடைய வாழ்க்கையில் கிளாரிட்டி கொண்டவர். இத்தனை ஆண்டுகள் தான் சினிமாவில் நடிக்கணும், அதற்குப் பின் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகணும் என்று தெளிவாக இருந்தார். நாங்கள் இப்பவும் ஒரு whatsapp குரூப்பில் இருக்கிறோம். இப்பவும் நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம். எங்களுடைய 80ஸ் whatsapp குரூப்பில் ரஜினி சாரும் இருக்கிறார் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.