அகரம் பவுண்டேஷன் திறப்பு விழா : மாணவர்களுக்கு மட்டும் இல்ல பொதுமக்களும் தான் – நெகிழ்ச்சியில் சூர்யா

0
316
- Advertisement -

அகரம் பவுண்டேஷனின் திறப்பு விழாவில் சூர்யா பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் சிவகுமாரின் ஆவார். இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி சூர்யா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். 2006ஆம் ஆண்டு முதல் இவர் சமூக சேவையில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

இதில் பல மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ஏழ்மையால் கல்வி கற்க முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்காக இவர் தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவி செய்து வருகிறார். மேலும், இந்த அறக்கட்டளை மூலம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் முதல் தலைமுறை பட்டதாரிகளாக உருவாக்கி இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அகரம் பவுண்டேஷனின் புதிய அலுவலகம் அமைந்திருக்கிறது. இதனுடைய திறப்பு விழா நேற்று தான் நடைபெற்றது.

- Advertisement -

அகரம் அறக்கட்டளை:

இந்த விழாவில் மூத்த நடிகர் சிவகுமார் குடும்பம் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த கட்டிடத்தை சூர்யா- கார்த்தியின் தாய் லட்சுமி அவர்கள் திறந்து வைத்திருந்தார். பின் இந்த விழாவில் சூர்யா, அகரம் பவுண்டேசன் இப்போது ஆரம்பித்த மாதிரி தான் இருக்கிறது. திரும்பி பார்த்தால் 20 வருடம் வந்துவிட்டது. 2006 இல் இருந்து 10 *10 சிறிய அளவில் ஆரம்பித்தது. 2010ல் விதை திட்டம் ஆரம்பித்தோம். 100 மாணவ மாணவிகளை படிக்க வைக்க ஆசைப்பட்டோம். அப்பவும் பத்தாயிரம் விண்ணப்பங்கள் வந்தது. 15 ஆண்டுகள் கடந்து இன்று 700 மாணவ மாணவிகளை படிக்க வைக்கிறோம். இப்பவும் பத்தாயிரம் விண்ணப்பம் வந்து கொண்டிருக்கிறது.

அகரம் திறப்பு விழா:

2006 இல் தொடங்கிய போது இருந்த தேவை 2025-லும் மாறவே இல்லை. இன்னும் நிறைய பேர் உடைய அன்பு, ஆதரவு தேவைப்படுகிறது. குறிப்பாக, நேரங்கள் வழங்கக்கூடிய தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். எனக்கு சொந்த வீடு கட்டும்போது இருந்த சந்தோஷத்தை விட தற்போது இந்த விழாவின் மூலம் மகிழ்ச்சி அதிகமாகி உள்ளது. தொடர்ந்து கல்வி சார்ந்த பணிகளை முன்னெடுக்க உத்வேகமாக இந்த கட்டிடம் அமைந்திருக்கிறது. 20 வருடத்தில் அவ்வளவு படிப்புகள், அனுபவங்கள், ஒவ்வொரு குழந்தையினுடைய வாழ்க்கையும் அவ்வளவு அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

சூர்யா பேசியது:

அவர்கள் முன்னேற்றத்திற்காக ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு, ஆசை. மாணவர்கள், தன்னார்வலர்கள் மட்டும் இல்லை நல்ல மனங்களையும், நல்ல சிந்தனை உடையவர்களும் ஒன்றிணைக்கும் இடமாக இந்த இடம் அமையும் என்று நான் நம்புகிறேன். அகரம் பயணத்திற்கு ஆதாரமாக இருக்கும் தன்னார்வலர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். நீங்க இல்லன்னா இந்த பயணம் சாத்தியம் இல்லை. விதை திட்டம் 5800 குழந்தைகள் கல்லூரி கல்விக்கு உறுதுணையாக இருக்க முடிந்திருக்கிறது. அவர்களின் 70% பெண் குழந்தைகள்.

அகரம் குறித்து சொன்னது:

ஜவ்வாது மலைகளில் உள்ள நம்முடைய பள்ளி திட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக 6000 மலைவாழ் மக்களுடைய கல்வி தொடர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒரு பகுதியாக தான் இந்த கட்டிடம் திறப்பு விழா, பயிற்சி பட்டறை, புத்தகங்கள் வெளியீடு மற்றும் வசதி வாசிப்பு நிகழ்வுகள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். தொடர்ந்து இங்கு தினசரி இலவச ஆங்கில வகுப்புகள், அறிவு சார்ந்த நிகழ்வுகளுக்கான திட்டங்களும் செயல்படுத்தி இருக்கின்றது. இந்த நிகழ்வுகளில் அகரம் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு பங்கு பெறலாம். ஒவ்வொரு வாரமும் அர்த்தமுள்ள உரையாடல்கள் இங்கு நடக்கும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் பங்கு இருக்கலாம். கல்வி மற்றும் சமூகம் முன்னேற்றத்திற்கான ஒரு மையமாக இந்த இடம் தொடர்ந்து செயல்படும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement