தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் 1070 மற்றும் 2024 என்று வெவ்வேறு காலகட்டத்தில் கதை நகர்கிறது. இரண்டு காலகட்டத்தையுமே மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். தற்போது இருக்கும் காலகட்டத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவர் ஒரு பவுண்ட்டி அண்டர். இவருக்கு ஜூடா என்பவருடைய மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கிருந்து கங்குவா கதை தொடங்குகிறது. 1070ல் ஐந்து கிராமங்களை காட்டுகிறார்கள். அதில் பெருமாச்சி தீவின் நாயகனாக வலம் வருபவர் கங்குவா.
கங்குவாவுக்கும் அவருடைய குழுவுக்கும் போர் செய்வது தான் குலத்தொழில். வீரமும் இயற்கை விளைந்த அந்த மண்ணை தன்னுடைய வசம் படுத்த ரோமானிய அரசு நினைக்கிறது. அவர்கள் அதற்காக கொடுவாவிற்கு பணத்த ஆசையை காட்டி தங்களுடைய வலைக்குள் கொண்டு வருகிறார்கள். அவனும் ஆசையால் பெருமாச்சி மக்களை நம்ப வைத்து கழுத்தறுகிறார். இதைக் கண்டு கங்குவாவும் அவருடைய இனமும் பொங்கி எழுகிறது.
இதனால் அவனையும், அவனுடைய மனைவி மற்றும் மகனையும் கொள்ள வேண்டும் என்று இன மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், கங்குவா அதற்கு எதிராக நிற்கிறார். என் மகன் இனி உன் மகன் என்று சொல்லி கங்குவா கையில் தன் மகனை ஒப்படைத்து விட்டு கொடுவாவின் மனைவி உடன்கட்டை ஏறுகிறார். அதற்கு பிறகு என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவை கொன்ற கங்குவாவை கொள்ள துடிக்கும் கொடுவாவின் பகை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தில் சூர்யா நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இரண்டை வேடங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார். அதோடு படத்திற்கு பக்க பலமே கலை இயக்கமும், கிராபிக்ஸ் காட்சிகள் தான். இதனால்தான் கங்குவா உலகத்தை நிஜத்திற்கு நெருக்கமாக கொண்டு வர முடிந்தது. கங்குவாவின் உருவத்தில் கனகச்சிதமாக சூர்யா பொருந்திருக்கிறார். சண்டை காட்சிகள் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, பெண்கள் எதிரிகளை தாக்குவது, பாம்புகள், தேள்கள் போன்ற காட்சிகள் எல்லாம் அருமையாக இருக்கிறது.
இருந்தாலும், கங்குவாவில் கதைக்களம் தெளிவாக இல்லை. இரண்டு காலகட்டங்களை மாற்றி மாற்றி காண்பிப்பதால் கொஞ்சம் பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஷுவல் காட்சிகள் நன்றாக இருக்கிறது. இயக்குனர் திரை கதையிலும் அதை கொண்டு சென்ற விதத்திலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். சில காட்சிகள் மக்கள் மத்தியில் கொண்டு சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சி சிறப்பாக இருக்கிறது. முதல் பாதி நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாதி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.
நிகழ்காலத்தை விட கடந்த காலத்தில் வரும் கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு நூற்றாண்டை மட்டும் சொல்லி இருந்ததால் இன்னும் சிறப்பாக இருக்கும். நிறைய விஷயங்களை படத்தில் காண்பித்திருப்பதால் சுவாரசியம் குறைவாக இருக்கிறது. சில காமெடிகள் நன்றாக இருந்தாலும் சில காமெடிகள் சிரிப்பு வரவில்லை. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.
நிறை:
சூர்யாவின் நடிப்பு சிறப்பு
கதைக்களம் ஓகே
பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் அருமை
முதல் பாதி நன்றாக இருக்கிறது
கிளைமாக்ஸ் சூப்பர்
குறை:
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
இரண்டு காலகட்டங்கள் என்பதால் பார்வையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது
சில காட்சிகள் புரிவதில் கஷ்டமாக இருக்கிறது
காமெடிகள் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை
இரண்டாம் பாதி சுமார்
மொத்தத்தில் கங்குவா – முயற்சி