படம் வெளியாக தெலுங்கு திரையுலகம் தான் காரணமா ! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சூர்யாவின் பேச்சு

0
319
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-
surya

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யப் போகும் சூரசம்ஹாரம் தான் சூர்யா துணிந்தவன். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் கடந்த வாரம் வெளியாகி உள்ளது. ஆனால், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிட கூடாது என்று அரசியல் கட்சியினர் பலர் போராட்டம் செய்தார்கள்.

- Advertisement -

எதற்கும் துணிந்தவன் படம் பற்றிய தகவல்:

மேலும், திரைப்படம் திரையிட இருந்த நேரத்தில் பாமகவினர் அங்கு சென்று அராஜகம் செய்ததால் அந்தப் படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டது என்று தியேட்டர் நிர்வாகம் தெரிவித்தது. இப்படி பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் சூர்யாவின் படம் வெளியானது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெறுகிறது. மேலும், சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

எதற்கும் துணிந்தவன் படத்தின் ப்ரோமோஷன்:

இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸுக்கு முன்பு சூர்யா இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவிற்காக பல இடங்களுக்கு சென்றார். அந்த வகையில் இவர் தெலுங்கு மொழியில் படத்தின் பிரமோஷனுக்கான விழாவில் சூர்யா கலந்துகொண்டார்.

-விளம்பரம்-

தெலுங்கு மொழியில் சூர்யா பேசியது:

அப்போது சூர்யா பேசியதை தற்போது பலரும் விமர்சித்து வருகிறார்கள். அது என்னவென்றால், தெலுங்கு திரையுலகம் தான் கொரோனா பரவலின் போது இந்தியா திரையுலகிற்கே எப்படி தைரியமாக இருப்பது? என்பதை காண்பித்து அகன்தா முதல் பீம்லா நாயக் வரை தெலுங்கு திரைப்படங்களை இந்திய அளவில் வெளியிட்டு வந்தனர். மேலும், மக்களும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனால் தான் மற்ற திரையுலகை சேர்ந்தவர்களும் படங்களை வெளியிட நம்பிக்கை வந்தது என்று பேசியிருந்தார்.

கடுப்பில் ரசிகர்கள் கூறியது:

இப்படி அவர் பேசியதை சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், Pandemic காலகட்டத்தில் 50 % இருக்கைகள் இருந்த போதிலும் விஜய்யின் மாஸ்டர் படம் வெற்றிகண்டது. இரண்டாம் அலையின் போது கூட ரஜினியின் அண்ணாத்த, மாநாடு உள்ளிட்ட படங்களை தைரியமாக வெளியிட்ட உங்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பி சூர்யா மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது சூர்யா படம் என்றாலும், சூர்யாவின் பேச்சு என்றாலும் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது என்று சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement