நியூ படத்தில் சூர்யா,சிம்ரனுக்கு பதில் இந்த ஜோடிதான் நடிக்க இருந்ததாம் ! பாத்தா ஷாக் ஆவீங்க

0
1999
New movie

தமிழில் அஜித் மற்றும் விஜய்க்கு ஒரு நல்ல திருப்புமுனை படங்களாக அமைந்தது குஷி மற்றும் வாலி படங்கள் . இந்த படங்களை இயக்கிய எஸ் ஜே சூர்யா தாமே இயக்கி , நடித்த 2004 வெளியான நியூ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் , திரையிடபட்ட முதல் நாளிலேயே 1 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையும் படைத்தது.

new

இந்த படத்தின் அறிவிப்பை அஜித் நடித்த வாலி படத்திற்கு பிறகே எஸ்.ஜே சூர்யா அறிவித்துவிட்டார். மேலும் 2000 த்தில் வெளியான அந்த அறிவிப்பில் நியூ படத்தில் அஜித் மற்றும் ஜோதிகாதான் நடிக்க போகிறார்கள் என்று இருந்தது. இதன் மூலம் ஏற்கனவே வாலி படத்தில் துணை நடிகையான ஜோதிகா நியூ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக இருந்தார்.

ஆனால் 2001 தான் நியூ படத்தின் கதையை எழுத தொடங்கிய எஸ். ஜே .சூர்யா அதற்கிடையே 2003இல் விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கிவிட்டார் . பின்னர் எப்படியோ நியூ படத்தின் கதையை எழுதி முடித்த எஸ். ஜே .சூர்யா அந்த படத்தில் தாமே நடித்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டார்.

ajith-jyothika

அதன் பின்னரே அந்த படத்தில் ஹீரோவாக அவதாரமெடுத்தார் . ஏற்கனவே குஷி படத்தில் ஜோதிகாவை ஹீரோயினாக நடிக்க வைத்தால் நியூ படத்தில் சிம்ரனை தன்னுடன் ஜோடியாக்கி கொண்டார். மேலும் இந்த படத்தில் இயக்கம் , நடிப்பு என்று அசத்திய எஸ். ஜே .சூர்யா .இந்த படத்தின் தயரிப்பாளராகவும் இருந்து வந்தார் பல சர்ச்சைகளையும் தாண்டி இந்த படம் வெளியாகினாலும் பல கோடி வசூலை இந்த படம் அள்ளித்தந்தது.