பிரேக்கிங் நியூஸ் : புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்.

0
1366
thavasi
- Advertisement -

அத்தனை உதவியும் கைக் கொடுக்கல – காலமானார் நடிகர் தவசி. சினிமாவைப் பொருத்தவரை உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் மட்டும்தான் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், துணை நடிகர்களாக இருக்கும் எத்தனையோ, மக்களுக்கு பரிட்சயமான நடிகர்களின் வாழ்க்கை எப்போதும் சோகத்தில் தான் முடிகிறது. அந்த வகையில் தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்த நடிகர் தவசியின் நிலைமையும் தற்போது பரிதாபத்தில் முடிந்துள்ளது. இவரை பார்த்ததுமே நம் நினைவிற்கு முதலில் வருவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் இவர் பேசிய கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனம் தான் நம் அனைவரின் நினைவிற்கு வரும்.

-விளம்பரம்-

ஆனால் கிழக்கு சீமையிலே படம் துவங்கி கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வரும் இவர் எண்ணற்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் தவசி புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டுவந்தார். சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. அதில்பேசியதவசி தான் 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருவதாகவும், தமக்கு இப்படி ஒரு நோய் ஆண்டவன் கொடுப்பான் என்று நினைத்து பார்க்க இல்லை என்றும் கூறி இருந்தார்.

- Advertisement -

அதேபோல போதிய பணம் இல்லாததால் சிகிச்சைக்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறிய தவசி தனக்கு சக கலைஞர்கள் உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.தவசி உதவி கேட்டு பேசிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும், பலரும் அந்த வீடியோவில் சூரி மற்றும் சிவகார்த்திகேயனை டேக் செய்தும் இருந்தனர். இதையடுத்து சிவாகார்த்தியேகன் சார்பாக 25,000 ரூபாயும் சூரி சார்பாக 20,000 ரூபாயும் வழங்கப்பட்டது. அதே போல விஜய் சேதுபதி 1 லட்சம் ரூபாய்யை அளித்திருந்தார்.

அதே போல நடிகர் தவசியை தனது மருத்துவமனையிலேயே அனுமதித்து இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார் திருப்பரங்குன்றம் எம் எல் ஏ சரவணன். மேலும், சிம்பு, ரோபோ ஷங்கர் என்று பலர் தவசியின் மருத்துவ செலவிற்கு நிதியுதவி அளித்து அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று வேண்டினர். இப்படி ஒரு நிலையில் நடிகர் தவசி காலமாகியுள்ளதா, தவசியின் நிலையை முதன் முதலாக வீடியோ எடுத்து வெளியிட்ட நாடக கலைஞர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement