தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. பின் விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கொஞ்சம் நிம்மதியடைந்தனர்.

Advertisement

கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி இருந்தது. பின் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று பேட்டி அளித்து இருந்தார். மேலும், கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

அப்போது கேப்டனை கண்ட தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு காலமானதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு Pnemonia என்னும் நுரையீரல் அழற்சி நோய் காரணமாக உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

கேப்டன் விஜயகாந்தின் இறப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். அந்த வகையில் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் தியாகவும் சென்று இருந்தார்.

காரில் இருந்து இறங்கிய உடனேயே கண்ணருடம் நடந்து வந்த அவர் ‘ விஜி,விஜி போய்ட்டியேடா, இனிமே எங்களுக்கு யாருடா இருக்கா விஜி’ என்று சொல்லிக்ண்டே வந்தார். மேலும், பேசிய அவர் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தீபாவளி அப்போ பாத்தேன். ஆனால், ரெண்டாவது முற அவன பாக்கும் போது ஒன்னுமே இல்ல, அவனுக்கு எல்லாருக்கும் உதவுறது தான் வேலையை. எல்லாரையும் சமமா பாப்பான் என்று கண்ணீருடன் பேசி இருக்கிறார்.

Advertisement