விஜய் முதலமைச்சர் பற்றி உதயநிதியிடம் ரசிகன் கேட்ட கேள்வி.! சிம்பிளாக முடித்த உதயநிதி

0
800
Vijay
- Advertisement -

மெர்சல்’ படத்தில் அவரது இளைய தளபதி என்ற பட்டம் `தளபதி’ என மாற்றப்பட்டது. அரசியலில் மு.க.ஸ்டாலினுக்கு தளபதி என்ற அடைமொழி இருப்பது அனைவரும் அறிந்ததே.

-விளம்பரம்-

sarkar
அரசியல் தலைவர்களை போன்றே நடிகர்களும் தங்களின் பெயருக்கு முன்னால் அடைமொழி வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்துவருகிறது. புரட்சித் தலைவர், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார் எனத் தொடங்கி மக்கள் செல்வன் வரை தொடர்கிறது இந்த அடைமொழி அலங்காரம். நடிகர் விஜய் இளைய தளபதி என்ற அடைமொழியுடன் நடித்து வந்தார்.

- Advertisement -

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். அவரது ரசிகர்கள் `விஜய் மக்கள் இயக்கம் ‘ என்ற பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கி விஜய் பிறந்தநாளின்போது நலத்திட்ட உதவிகளையும் செய்துவருகிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவது குறித்த விவாதங்கள் உச்சத்தில் இருந்தபோது, வெளிவந்த `மெர்சல்’ படத்தில் அவரது இளைய தளபதி என்ற பட்டம் `தளபதி’ என மாற்றப்பட்டது.

udhay

-விளம்பரம்-

அரசியலில் மு.க.ஸ்டாலினுக்கு தளபதி என்ற அடைமொழி இருப்பது அனைவரும் அறிந்ததே. இதனால் அப்போதே `தளபதி’ பட்டம் குறித்து சிறு சலசலப்பு உண்டானது. நேற்றைய தினம் சர்கார் பட ஆடியோ ரிலீஸில் தான் `முதலமைச்சர் ஆனால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன்’ என விஜய் பேசியது பரபரப்பாகியது. இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து “விஜயை தளபதி என்று அழைப்பதை, தி.மு.க வினர் எப்படி எடுத்துக்கொள்வர்” எனக் கேட்டார்.

அதற்கு உதயநிதி, “ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான் !” என ரிப்ளை கொடுத்தார்.

Advertisement