நடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள்.காமெடியில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் இந்த இம்சை அரசனுக்கு மேலும் ஒரு இம்சை வந்தது.

Advertisement

தமிழில் சிம்புதேவன் இயக்கி 2006 ல் வெளிவந்த படம் 23 ஆம் புலிகேசி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.இந்நிலையில் மீண்டும் வடிவேலுவை வைத்து 24 ஆம் புலிகேசியை இயக்கவிருந்தது.23 ஆம் புலிகேசியை தயாரித்த ஷங்கர் தான் இந்த படத்தினையும் தயாரிக்க இருந்தார்.

இந்த நிலையில் வடிவேலு இப்படத்தில் தான் நடிக்கமாட்டேன் என கூறி திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் படத்தை முடித்து தரும்படியும் இல்லையேல் வடிவேலுவால் ஏற்பட்ட 9 கோடி ருபாய் நஷ்டத் தொகை தரும்படியும் பட குழுவினர் புகார் அளித்தனர்.இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்தது.

Advertisement

தற்போது இந்த பிரச்சனைக்கு சுமுக தீர்வு கிடைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடிவேலுவுடன் ஷங்கரும், சிம்பு தேவனும் 24 ஆம் புலிகேசியில் அவரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் வடிவேலும் இறங்கி வந்துள்ளாராம், இதனால் வடிவேலுவின் 24 ஆம் புகைகேசி படம் மீண்டும் எடுக்கப்படலாம் என்று நம்பிக்கையான வட்டாரத்தில் இருந்து தகவல்வெளியாகியுள்ளது .

Advertisement
Advertisement