படிக்காதவன் படத்தில் விவேக் கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது வடிவேலு தான். அறிய புகைப்படம் இதோ.

0
5050
vadivelu
- Advertisement -

மாப்பிள்ளை, படிக்காதவன் என்று தனது மாமனார் ரஜினியின் பட டைட்டில்களை வைத்து நடிகர் தனுஷ் வரிசையாக படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘படிக்காதவன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தனுஷ் தமன்னா, விவேக் நடித்த இந்த படத்தில் விவேக் முழு நீள காமெடி ரோலில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் விவேக் மற்றும் தனுஷின் காமெடி மிகவும் பிரமாதமாக அமைந்தது. அதன் பின்னர் இவர்கள் இருவர் கூட்டணியில் பல படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், நடிகர் விவேக் நடித்த அந்த காதா பாத்திரத்தில் முதன் முதலில் காமெடி நடிகர் வடிவேலு தான் நடித்திருந்தாராம். இந்த படத்தில் நடிகர் வடிவேலு விவேக் கதாபாத்திரத்தில் இரண்டு நாட்கள் கூட நடித்து முடித்து விட்டாராம். அதன் பின்னர் இந்த படத்தில் இயக்குனர் சுராஜிடம் தனக்கு காட்சிகளை அதிகமாக வைக்குமாறு கேட்டுள்ளார்.

- Advertisement -

அதற்கு சுராஜ் மறுக்கவே இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம் வடிவேலு. அதன் பின்னர் தான் வடிவேலுவுக்கு பதிலாக விவேக்கை கமிட் செய்துள்ளனர். ஒரு வேலை இந்த படத்தில் வடிவேலு நடித்திருந்தால் இந்த படம் இதை விட மேலும் வெற்றியடைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் இந்த படத்தில் நடிகர் விவேக் கண்ணாடி முன்னாடி அழும் காட்சிகளில் வடிவேலு நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தாலே சிரிப்பு தானாக வருகிறது.

ஆனால், இந்த படத்தின் வாய்ப்பை வடிவேலு இழந்து விட்டார். அதே போல இதுவரை தனுஷ் மற்றும் வடிவேலு ஓரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. ஒருவேளை இந்த படத்தில் நடித்திருந்தால், வடிவேலுவை தான் தற்போது தனது படங்களில் தனுஷ் காமெடியனாக போட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. மேலும், இந்த படத்திற்கு பின்னர் தான் விவேக் மற்றும் தனுஷ் கூட்டணியில் பல்வேறு படங்கள் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement