சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் விதார்த்திற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. 2001-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘மின்னலே’. அதில் விதார்த் மிக சிறிய வேடத்தில் அறிமுகமாகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சூர்யாவின் ‘மௌனம் பேசியதே’, சிபிராஜின் ‘ஸ்டுடண்ட் நம்பர் 1, லீ’, விஷாலின் ‘சண்டக்கோழி’, கரனின் ‘கொக்கி’, அஜித்தின் ‘திருப்பதி’, தனுஷின் ‘பரட்டை என்கிற அழகு சுந்தரம்’, அர்ஜுனின் ‘திருவண்ணாமலை’, விஜய்யின் ‘குருவி’ போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன ரோலில் வலம் வந்திருந்தார் விதார்த். 2010-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘மைனா’.

Advertisement

இந்த படத்தில் விதார்த் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தினை பிரபல இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியிருந்தார். இதில் விதார்த்திற்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் தம்பி இராமையா, சேது.ஜி.பிள்ளை ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. படத்தில் விதார்த்தின் நடிப்பு பெரிதும் பேசப் பட்டது.

‘மைனா’ படத்தின் வெற்றிக்கு பிறகு “முதல் இடம், கொள்ளைக்காரன், பட்டய கெளப்பணும் பாண்டியா, ஆள், குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு’ என அடுத்தடுத்து பல படங்களில் கதையின் நாயகனாக நடித்தார் விதார்த். இதில் “குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு” ஆகிய மூன்று படங்களும் வெற்றி பெற்றது.

Advertisement

2014-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ‘தல’ அஜித் – பிரபல இயக்குநர் சிவா கூட்டணியில் வெளி வந்த ‘வீரம்’ படத்தில், அஜித்திற்கு தம்பியாக நடித்திருந்தார் விதார்த். தற்போது, சமூக வலைத்தளத்தில் விதார்த் அறிமுகமான ‘மின்னலே’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி கொண்டிருக்கிறது. இந்த படத்தினை பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.

Advertisement

இதில் ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார். தற்போது, தமிழில் ‘அக்னி நட்சத்திரம், ஆயிரம் பொற்காசுகள், நட்சத்ரா’ என அடுத்தடுத்து மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் விதார்த். இப்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement