அஜித்,விஜய் பட வில்லனுக்கு நேர்ந்த சோகம் ! காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி !

0
1098
Vidyut-Jammwal

நடிக்ர் வித்யுத் ஜாம்வால் பாலிவுட் திரையுலகில் ஒரு முன்னணி நடிகர் ஆவார். அங்கு உள்ள அனைத்து முன்னை ஹீரோக்களுக்கு வில்லனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

thuppaki

இயல்பாகவே அவர் ஒரு மார்சியல் ஆர்ட்ஸ் கலைஞர். இதனால் படங்களில் வைக்கப்படும் ஆக்சன் காட்சிகளில் டூப் போடாமல் தானே அந்த காட்சிகளில் நடிப்பார்.

இந்நிலையில் தற்போது ஜங்கில் என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங்கின் போது ஒரு சாகச காட்சியில் டூப் போடாமல் அவரே நடித்தார். இந்த காட்சியில் போது எதிர்பாராத விதமாக வித்யுத்திற்கு தலையில் காயம் ஏற்பட்டு மண்டை உடைந்தது.

Vidyut-Jammwal

இதனால் உடனடியாக மருத்துவமனை சென்று அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு பின்னர் வந்து அந்த சீனில் அவரே மீண்டும் நடித்தார். இந்த சம்பவம் படக்குக்குழுவினரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. வித்யுத் பில்லா-2வில் அஜித்திற்கு வில்லனாகவும், துப்பாக்கி படத்தில் விஜய்க்கு.வில்லனாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.