சம்பளம் கேட்டவரை ஜாதி பெயர் சொல்லி திட்டிய பா ஜ க வை சேர்ந்த நடிகர் விக்னேஷ் – ஆடியோவை பகிர்ந்த வன்னியரசு.

0
750
Vignesh
- Advertisement -

தன்னிடம் வேலை செய்த நபரை சாதி ரீதியாக நடிகர் விக்னேஷ் பேசி இருக்கிறார் என்ற சர்ச்சை சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் விக்னேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு வெளியான சின்னதாயி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். ஆனால், இவருடைய திரை பயணத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கிழக்கு சீமையிலே படம் தான்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஏ ஆர் ரகுமானின் இசை எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. அதோடு கிராமத்து பின்னணியில் வரும் படங்களில் கதாநாயகனாக விக்னேஷ் திகழ்ந்து கொண்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் நாடோடி மன்னன், மண்ணுக்கு மரியாதை, என்னை தாலாட்ட வருவாளா,சூரி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் சமீப காலமாக இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த பூவே உனக்காக சீரியலில் விக்னேஷ் நடித்து இருந்தார். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

இது ஒரு பக்கம் இருக்க இவர் சொந்தமாக ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு தான் இருடியம் மோசடி கும்பலிடம் இரண்டு கோடி ரூபாய் இழந்து விட்டதாக காவல்நிலையத்தில் விக்னேஷ் புகார் அளித்தது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் பா ஜ க கட்சியிலும் சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விக்னேஷ் சாதி ரீதியாக தரைக்குறைவாக பேசியிருக்கிறார் என்று சோசியல் மீடியாவில் புது சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அதாவது, நடிகர் விக்னேஷ் தன் உதவியாளரிடம் ஊதியம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அப்போது அவர் ஜாதி ரீதியாக தரை குறைவாக பேசியிருக்கிறார் என்று ஆடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த பலருமே விக்னேஷிற்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக விக்னேஷ் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், அந்த ஆடியோவில் இருந்தது என்னுடைய குரல் இல்லை. அந்த குரலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. என்னிடம் வேறொரு உதவியாளர்கள் இருந்தார். மைசூரில் சந்திரமுகி 2 சூட்டிங் போகும்போது வேறு ஒருவர் மூலமாக போன் செய்து கஷ்டம் என சொல்லி வேலை கேட்டார்.

அவரை நான் மைசூருக்கு அழைத்து சென்றேன். 2 மணி நேரம் சூட்டிங் இருந்தது. பாதி நாள் ஊதியம் வாங்கிக் கொள் என்றேன். அவரும் சரி என்றார். பின்னர் எனக்கு முழு ஊதியம் வேண்டும் என அவர் போன் செய்து தொந்தரவு செய்தார். இவ்வளவு தான் நடந்தது. யாரோ அவர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள். நான் சொல்லாத வார்த்தையை சொல்லி காயப்படுத்தினேன் என்றெல்லாம் பேசுகிறார்கள். இதனால் நான் நிறைய மன உளைச்சல் சந்தித்திருக்கிறேன்.

என் சொந்த ஊரில் உள்ள கோயிலில் ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் விடவில்லை என்பதால் நான் அந்த கோயிலுக்கே செல்வதில்லை. இப்படி இருக்கும்போது நான் எப்படி ஜாதி ரீதியாக பேசி இருப்பேன். ஊடகங்களில் வெளியாவதை நிறுத்த வேண்டும் என்றால் பணம் கொடுங்கள் என ஒருவர் போன் செய்தார். அந்தப் பையன் வேலைக்கு வந்து நான்கு நாட்கள் தான் ஆகிறது. யாரோ ஒருவர் பிளான் பண்ணி செய்கிறார்கள். அது என் தொழில் எதிரியா என்றும் எனக்கு தெரியவில்லை. நான் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்று பேசி இருக்கிறார்.

Advertisement