கடந்த சில நாட்களாக சமூக வளைத்தளத்தில் #10challenge என்ற ஒரு புதிய சவால் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதில் 10 வருடங்களுக்கு முன்னாள் இருக்கும் புகைப்படத்தையும் தற்போது உள்ள புகைப்படத்தையும் பதிவிட வேண்டும்.
இளசுகள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வரும் இந்த புதிய வடை சவால் திரையுலகிலும் மிகவும் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு நடிகர், நடிகைகளும் தாங்கள் 10 வருடத்திற்கு முன்னாள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர் .
ஆனால், ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்கள் இந்த சவாலில் பங்குபெறாதது தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் #10yearschallenge புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஹேமா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுள்ளார். அதில் விஜயுடன் 10 வருடத்திற்கு முன்னாள் இருக்கும் புகைப்படத்தையும் ‘மெர்சல்’ படத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.