இந்திய நாட்டின் ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும் பல இந்திய இளைஞர்களின் ரோல் மாடலாக இருந்தவர் டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாம் அவர்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட இவரது மரணம் இந்திய நாட்டிற்கு ஒரு பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 27) அவரது 3 ஆம் ஆண்டு நினைவு நாளை மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

Advertisement

டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு காமெடி நடிகர்களான விவேக் மற்றும் தாமு கொஞ்சம் செல்ல பிள்ளைகளாக இருந்து வந்தனர் என்றே கூறலாம். அதில் காமெடி நடிகரான தாமு மறைந்த குடியரசு தலைவரின் சிறந்த மாணவன் என்றும் கூறலாம். அப்துல் கலாமின் சிந்தனைகளை மட்டுமல்ல செயல்களையும் ‘லீட் இந்தியா ‘ என்ற அமைப்பின் மூலம் மாணவர்களிடன் கொண்டு சென்று அப்துல் கலாம் கனவை நினைவாக்கி வருகிறார்.

காமெடி நடிகரான தாமு எண்ணெற்ற படங்களில் பல முன்னனி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். மேலும், இவர் நடிகர் விஜய்யுடனும் பல படங்களில் நடித்துள்ளார். அப்படி விஜய் நடித்த ‘கில்லி’ படத்தில் தாமு நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் விஜய், கலாம் ஐயா அவர்களை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், கலாம் ஐயாவை பற்றி நடிகர் தாமுவிடம், நடிகர் விஜய் கூறுகையில்’ஒரு மனிதருக்குள் இவ்வளவு விடய ஞானம் இருக்குமா? நான் அவரை பற்றி என்னமோனு நினைச்சிட்டு இருந்தேன். கலாம் சார் உனக்கு எப்படி அறிமுகமானாங்க’ என்று மிகவும் ஆச்சர்யபட்டு கேட்டுள்ளாராம். இந்த தகவலை நடிகர் தாமு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Advertisement