தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர் ஆவார். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டவர். இவர் தளபதி விஜயை வைத்து மூன்று முறை படம் இயக்கியுள்ளார். மூன்று படங்களுமே வசூலை அள்ளி தந்தது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த 2019 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு வெளியான பிகில் படம் உலகம் முழுவதும் பட்டைய கிளப்பியது.
இயக்குனர் அட்லீ அவர்கள் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டவர்.அட்லீ பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த திருமணத்தில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்துகொண்டார். இயக்குனர் அட்லீ , கனா காணும் காலங்கள் சீரியல் தொடங்கி பல சீரியல்கள் நடித்தும், வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்த பிரியாவை காதலித்தார்.
இதையும் பாருங்க : ‘இந்த ரூவாய வச்சிக்க ஐயா’ சுருக்குப் பையில் இருந்த பணத்தை கொடுத்த பாட்டி – வீடியோவை கண்டு ‘முதியோர் இல்லம்’ கட்ட முடிவெடுத்த நடிகர்.
பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், நடிகை பிரியா சின்னத்திரையில் நடித்தாலும் சினிமாவில் அறிமுகமானது என்னவோ சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தில் தான். இந்த படத்தில் அனுஷ்காவின் சகோதரியாக நடித்திருந்தார் நடிகை பிரியா. அதன் பின்னர் நான் மஹான் அல்ல, சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார் பிரியா. ஆனால், திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டார் பிரியா.
பிரியா, நடிப்பை கைவிட்டதற்கான காரணத்தை சொன்ன அட்லீ, அவளுக்கு என்ன பிடிக்கும் என்பதை பல முறை கேட்டிருக்கிறேன். அவளுடைய திறமை என்ன என்பது எனக்கு தெரியும்.கண்டிப்பாக அவர் என்னுடைய தயாரிப்பில் நடிப்பார். கண்டிப்பாக அவர் விரைவில் திரும்ப வருவார். எனக்காக தான் நடிப்பை அவர் விட்டுவிட்டார் என்பது எனக்கு தெரியும். நான் கூட சொன்னேன், உனக்கு விருப்பமிருந்தால் நடி என்று, ஆனால் அவள் தான் கொஞ்சம் நாள் போக வேண்டும் என்று கூறிவிட்டார். அவள் மிகவும் திறமைசாலி, அவளுடைய திறமையை வெளியில் கொண்டு வருவேன். கூடிய விரைவில் அது நடக்கும் என்று கூறி இருந்தார்.