காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று ஊடுருவ பார்த்தது அதனை இந்திய ராணுவ வீரர்கள் வான்வழித் தாக்குதல் நடத்தி அழித்தனர்.
இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார் அவரை விடுவிக்க வேண்டும் என்று இந்தியா சார்பில் கோரிக்கை வலுத்து நிலையில் அவர் நாளை விடுதலை செய்யப்பட உள்ளார் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்திய ராணுவத்தில் இருக்கும் செல்வம் என்ற விஜய் ரசிகர் ஒருவர் விஜயைப் பற்றி உருக்கமான பதிவு ஒன்றை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 17 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வரும் செல்வம் ஒரு தீவிர விஜய் ரசிகராம். காஷ்மீரில் தற்போது நிலவிவரும் பதட்டமான சூழலுக்கு மத்தியில் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுப் பிரிய முடியாமல் தனது நண்பரிடம் புலம்பியுள்ளார்.
அந்த நபர் செல்வம் புலம்பிய விடயத்தை முகநூல் பக்கத்திலும் விஜய் ரசிகர் மன்ற முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதை அறிந்த விஜய் செல்வம் என்ற அந்த ராணுவ வீரர் செல்வதை தொலைபேசியில் தொடர்புகொண்டு போனில் பேசியுள்ளார். அதில் நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் உங்களுக்கு எதுவும் ஆகாது வெற்றியுடன் திரும்பி வந்தவுடன் உங்களை சந்திக்கிறேன் என்று அந்த ராணுவ வீரர் வெற்றியுசெல்வத்திற்கு தைரியம் சொல்லியுள்ளார். விஜய் பேசியதை கேட்டவுடன் மகிழ்ச்சியுடன் எல்லையை காஷ்மீருக்கு சென்றுள்ளாராம் அந்த ராணுவ வீரர் மேலும், தான் திரும்பி வெற்றியுடன் வந்தால் உண்மையாகவே விஜயுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன். ஒருவேளை நான் உயிரோட வரவில்லை என்றால் என் போட்டோவை வைத்து அவருடன் புகைப்படம் எடுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளாராம் செல்வம்