தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நள்ளிரவில் நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். தூத்துக்குடியில் கடந்த 22 -ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது 13 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் வைகோ, ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், பழ.நெடுமாறன், நல்லகண்ணு, முத்தரசன், சீதாராம் யெச்சூரி, கே.பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசர், தொல்.

திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

Advertisement

Advertisement

மேலும் நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த், சரத்குமார், பாலாஜி ஆகியோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களை ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென நடிகர் விஜய் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Advertisement