தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடித்த எண்ணற்ற படங்கள் கோடிகளில் வசூலை குவித்த தோடு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கிறது. ஆனால், இவர் நடித்த ஒரு சில படங்கள் பெரும் தோல்வியை தழுவி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.எஸ் ஏ சந்திரசேகர் தனது மகன் விஜய் நடித்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மீதி விஜய்யின் தந்தை அளித்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு வெளியான அழகிய தமிழ் மகன் திரைப்படம் ஒன்று பரதன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோ மற்றும் வில்லன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்தினை ஸ்வரகசித்ரா அப்பச்சன் தயாரித்து இருந்தார். கேரளாவை சேர்ந்த இவர் பல மலையாள படங்களை தயாரித்து இருக்கிறார். மேலும், இவர் ஏற்கன்வே விஜய் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பிரின்ட்ஸ் படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நிலையில் இவர் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக விஜய் தந்தை அளித்த புகாரின் பெயரில் கைது அழகிய தமிழ்மகன் திரைப்படத்தை வெளியீட்டுக்காக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 15 நாளில் திருப்பி தருவதாக கூறி அப்பச்சன், ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தார்.இந்த பணத்தை திருப்பி கொடுக்கும் வகையில், அப்பச்சன் கொடுத்த காசோலை வங்கி கணக்கில் பணமில்லாமல் இரண்டு முறை திரும்பி வந்ததாக குற்றம் சாட்டி இருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இதையடுத்து தயாரிப்பாளர் அப்பச்சன் மீது கடந்த 2008ம் ஆண்டு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார் சந்திரசேகர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்ராஜ், ஸ்வர்க்க சித்ரா தயாரிப்பு நிறுவன உரிமையாளர்.அப்பச்சனுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஒரு கோடி ரூபாயை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.