விஜயின் கோட் படத்தின் கதை குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் மத்தியில் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து இருந்தது.
லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
விஜய் கோட் படம்:
இந்த படத்தில் விஜய் அவர்கள் அப்பா- மகன் என்ற இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். தற்போது மும்முரமாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா என பல இடங்களில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
GOAT Plot!#TheGreatestOfAllTime pic.twitter.com/Rkiw9Ao1cC
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 14, 2024
படம் குறித்த அப்டேட்:
மேலும், கூடிய விரைவிலேயே கோட் படத்தினுடைய டிரைலரும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கோட் படத்தின் கதை குறித்து வெங்கட் பிரபு சொன்னதாக, ஒரு பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கோட் படம் கற்பனை கதை தான். நிஜத்திற்கு பக்கத்தில் வருகிற மாதிரி செய்திருக்கிறோம். SATSன்னு என்று பெயர். special aniti terrorist squads என்று சொல்லுவார்கள். இது raw அமைப்போட இணைந்து ஒரு குரூப் செய்கிற வேலை.
கோட் படத்தின் கதை:
அதில் ஒரு சமயத்தில் சிறப்பாக வேலை செய்த சிலர், ஒரு காலத்தில் அவர்கள் செய்த விஷயம் இப்போது ஒரு பிரச்சனையாக வந்து அவர்கள் முன்னாடி நிற்கிறது. அதை எப்படி எதிர்கொண்டு வெல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. பக்கா ஆக்ஷனில் படம் இருக்கிறது. படத்திற்கு உள்ளே வந்தால் ஒரு திருவிழா தான். ரொம்ப நாள் கழித்து விஜய் சாரை நீங்க என்னென்ன செய்து பார்க்க நினைத்தீர்களோ? அது எல்லாமே இருக்கு. திரையில் உங்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.
கோட் படத்தின் பாடல்கள்:
ஏற்கனவே இந்த படத்தினுடைய மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கோட் படத்தினுடைய முதல் பாடலான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து நடிகர் விஜய்யின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘கோட்’ படத்திலிருந்து ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் வந்திருக்கிறது. சமீபத்தில் ‘ஸ்பார்க்’ என்ற மூன்றாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.