நான் நிஜத்தில் முதலமைச்சர் ஆனால்…முதலில் இதைத்தான் செய்வேன்..! தெறிக்கவிட்ட விஜய்..!

0
282
vijay

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், ராதாரவி, கீர்த்தி சுரேஷ்,வரலக்ஷ்மி சரத் குமார், ஏ ஆர் ரகுமான் ஆகியோர் பங்குபெற்றனர்.

Sarkar

இசை வெளியிட்டு விழாவை போல அல்லாமல் விஜய்க்கு நடத்தபட்டு வரும் பாராட்டு விழா போலவே இருந்து வருகிறது. இந்த விழாவில் ரசிகர்கள் அனைவரும் ‘தளபதி தளபதி ‘ என்று ஆர்ப்பரிக்க மேடைக்கு வந்தார் நடிகர் விஜய். விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் அவரது பேச்சை கேட்க ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கு, ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்று விஜய் கூற ஆரம்பித்தும் அரங்கமே அதிர்ந்தது.

விஜய்யிடம் பிரசன்னா..நீங்கள் இந்த படத்தில் முதலைச்சராக வருகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம் என்று கேட்டார்.

Prasana

அதற்கு பதிலளித்த நடிகர் விஜய், நான் முதல்வராகவெல்லாம் நடிக்கவில்லை என்று கூறுகிறார். அதன் பின்னர் நடிகர் பிரசன்னா, படத்தில் முதலமைச்சராக நடிக்கவில்லை ஒருவேளை நிஜத்தில் முதலமைச்சராக ஆனால் என்ன செய்வீர்கள் என்று கேட்க, அதற்கு விஜய் நிஜத்தில் முதலமைச்சரானால் கண்டிப்பாக (முதலமைச்சராக)நடிக்க மாட்டேன் உண்மையாக இருப்பேன் என்று கூறினார்.

பின்னர் நடிகர் பிரசன்னா, ஒருவேளை அனைவரும் உங்களை அழைக்கும் காலம் வரும் அப்போது நீங்கள் முதலமைச்சரனால் நீங்கள் முதலில் என்ன விஷத்தை மாற்றுவீர்கள் என்று கேட்கிறார். அதற்கு விஜய் ‘நீங்கள் கற்பனையாக கேட்கிறீர்கள் அதானே, நான் வந்தால் முதலில் ஊழல், லஞ்சம் இவை அனைத்தையும் ஒழிப்பேன்.ஆனால் அதனை ஒழிப்பது என்பது ஈஸியான வேலை இல்லை ஏனெனில் நம் அனைவரது வாழ்விலும் அது வைரஸ் போல பரவி இருக்கிறது. இதை முழுமையாக ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் ஒழித்து தான் ஆக வேண்டும் என்று கூறுகிறார் விஜய்.

Actor-vijay

விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளத.