கையில் பீர் பாட்டிலுடன் விஜய் – சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய புகைப்படம்.

0
40852
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய பெயரில் நிறைய ரசிகர் மன்றமும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் ஆங்காங்கே விஜய் ரசிகர் நற்பணி மன்றங்கள் மூலம் விஜய் ரசிகர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அதே போல நடிகர் விஜய்க்கு ரசிகர்களை போல ரசிகைகளும் அதிகம் தான்.

-விளம்பரம்-

ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அந்த அளவிற்கு இல்லை என்றாலும். இளைய தளபதியாக பெயர் வாங்கிய பின்னர் தங்களுக்கு விஜய் மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று பல பெண்களும் ஆசைப்பட்டத்தை நாம் மறுக்க முடியாது. அதே போல தற்போது இருக்கும் தலைமுறையில் ரசிகைகள் அனைவரும் விஜய்யை அண்ணன் என்ற ஸ்தானஸ்தில் தான் பார்த்து வருகின்றனர்.இவரது படங்கள் என்றாலே அது ரசிகர்களுக்கு திருவிழா தான்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர்மகேந்திரன் , சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்து உள்ளது. இந்த படத்தில் கூட நடிகர் விஜய் முதல் பாதியில் ஒரு குடிகாரராக தான் நடித்து இருப்பார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் கையில் பீர் பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்காகி இருக்கிறார்கள். மேலும், இந்த புகைப்படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement