பல்வேறு நடிகர் பட்டாளம் நடித்துள்ள இந்த படத்தில் நடித்தது குறித்த அனுபவங்களை பலரும் பகிர்ந்து வரும் நிலையில். இந்த படத்தில் நடித்துள்ள இளம் நடிகர் லல்லு சமீபத்தில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் லல்லு, இந்த படத்தில் நடிப்பதற்கு அற்புதமான வாய்ப்பை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் சாருக்கு நன்றி. நான் தளபதியுடன் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது என்னுடைய கனவு நினைவான தருணம் போல உள்ளது என்று லல்லு பதிவிட்டுள்ளார்.A big thanks to @ARMurugadoss sir for giving me an amazing opportunity to work in sarkar. Never did I imagine I'd share screen space with my #Thalapathy❤️
— Lallu (@lalluTweets) September 15, 2018
It's a dream come true moment for me.#Sarkar #Thalapathy62 pic.twitter.com/4t9FbLMn5J
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நடிகர் லல்லு, சென்னை 28 படத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். மேலும், 8 தோட்டாக்கள் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் லல்லு பின்னர் கெளதம் கார்த்திக் நடித்த "ரங்கூன் " படத்தில் அத்தோ குமார் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




