தேசிய விருதுபெற்ற இயக்குனர் ஜனனாதன் நேற்று (மார்ச் 14) காலமாகி உள்ள சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் ஜெயம் ரவி ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழில் கடந்த 2003ஆம் ஆண்டு நடிகர் ஷாம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளியான இயற்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்பி ஜனநாதன். இயற்கை படத்தை தொடர்ந்து தமிழில் இவர், ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார்.

இயற்கை திரைப்படத்திற்கு பின்னர் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது. தனது முதல் படமான இயற்கை படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றார் ஜனநாதன். இறுதியாக ஜெயம்ரவி நடித்த ‘பூலோகம்’ திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றிய ஜனநாதன் தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து வந்த ‘லாபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

இதையும் பாருங்க : BJP வேட்பாளர் வானதி ஸ்ரீநிவாஸிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட ரசிகர் – அதற்கு அவர் கொடுத்த செம பதில்.

Advertisement

இயக்குநர் SP ஜனநாதன் அவர்களுக்குநேற்றைய முன் தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அவர் காலமாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது. இந்த செய்தி வெளியான ஒரு சில மணி நேரத்தில் இயக்குனர் அமீர், கருபழனியப்பன் என்று பலரும் ஜனநாதனின் உடல் நிலை குறித்து சமூக வலைதளத்தில் தெரிவித்தனர். மேலும்,அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்கள்.

கடந்த 11-ம் தேதி மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு சென்றிருந்தார். மணி 3.30 ஆகியும் அவர் திரும்பாததால், அவரது உதவியாளர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு திறந்திருக்க சுயநினைவின்றி ஜனநாதன் மயங்கி கிடந்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த உதவியாளர்கள், அவரை மீட்டு கிரீம்ஸ் ரோட்டிலுள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிசிச்சை அளிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இப்படி ஒரு நிலையில் ஜனநாதனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி கண் கலங்கி அழுதார்.

Advertisement
Advertisement