-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

BJP வேட்பாளர் வானதி ஸ்ரீநிவாஸிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட ரசிகர் – அதற்கு அவர் கொடுத்த செம பதில்.

0
928

நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர். அதே போல சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

-விளம்பரம்-

அவ்வளவு ஏன் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 14 தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். அந்த வீடியோவும் வைரலானது.இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதையும் பாருங்க “: 96ல ராமின் சகோதரியா நடிச்சது நான்தா. ஆனா, படத்துல எடிட் பண்ணிட்டாங்க – நடிகை கொடுத்த ஷாக்.

-விளம்பரம்-

நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் பெயரை பயன்படுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இப்படி ஒரு நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக கட்சி சார்பாக வாழ்த்தி ஸ்ரீநிவாசனுக்கு சீட்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது அதனை நேற்று வானதி ஸ்ரீனிவாசன் அறிவித்திருந்தார் இப்படி ஒரு நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வானதி ஸ்ரீனிவாசனிடம் ‘வலிமை அப்டேட் எப்ப’ என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள வானதி ஸ்ரீநிவாசன், நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என்று பதில் அளித்ததோடு, Vanathi4KovaiSouth #Valimai #ValimaiUpdate போன்ற ஹேஷ் டேக்குகளையும் போட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. (ஒரு வேல வலிமை அப்டேட்காக கோவை தெற்கு அஜித் ரசிகர்கள் எல்லாம் வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஓட்டு போட்ருவாங்களோ)

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news