ரசிகரின் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் விஜய் ..!வைரலாகும் வீடியோ..!

0
745
Vijay
- Advertisement -

முருகதாஸ் – விஜய் காம்போவில் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கிறது `சர்கார்.’ இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. டீசர் மூலம் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் அரசியல் படம் என்பதை டீசர் உறுதி செய்துள்ளது. இதனிடையே விஜய் குழந்தையுடன் கொஞ்சும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

நடிகர் விஜய் தனது பிஸியான நேரத்திலும் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குபவர். சமீபத்தில் அவர் தன் மகளுடன் கனடாவில் உள்ள தனியார் உணவகத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி செம வைரலானது. சர்கார் படம் முடிந்து ரிலீஸூக்குத் தயாராக உள்ளது.

- Advertisement -

இந்த இடைவெளியில், இளைப்பாறிக்கொண்டிருக்கும் விஜய், குழந்தை ஒன்றுடன் கொஞ்சும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், தன் மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சுகிறார். இதை அவரின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement