தமிழ் சினிமாவில் கேப்டன் என்றழைக்கபடும் விஜயகாந்த் கடந்த 2004 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கட்சி என்ற கட்சியை துவங்கினார். ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது அதன் பின்னர் அதிமுகவிடம் கூட்டணி அமைத்து விஜயகாந்த் பெரு வாரியான தொகுதிகளில் வெற்றியும் பெற்றார். அதன் பின்னர் ஜெயலலிதாவிற்கு இடையேயான கருத்து வெருபாட்டால் அதிமுக கட்சியில் இருந்து பிரிந்து எதிர் கட்சி தலைவராக இருந்து வந்தார்.

Advertisement

ஆரம்பத்தில் விஜய்காந்திற்கு அரசியலில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். ஆனால் , உடல் நல குறைபாடு காரணமாக தீவிர அரசியலில் விஜயகந்தால் ஈடுபட முடியாமல் போனது. உடல் சிகிச்சைக்காக அடிக்கடி வெளிநாடு பயனம் செய்து வந்தார் விஜயகாந்த். இருப்பினும் கட்சி பணிகளையும் கட்சியின் மூலம்மக்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்த் அவர்கள் உடல் நல குறைபாட்டால் சென்னை மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியது. ஆனால் , அது வதந்தி என்றும் வழக்கமாக நடக்கும் சாதாரண பரிசோதனைகாக தான் விஜயகாந்த் மியாட் மருத்துவ மனைக்கு சென்றார் என்று தெரியவந்தது. இந்நிலையில் சமீபத்தில் விஜயகாந்த தலைவராக இருந்து வரும் தே மு தி க கட்சியின் 14 ஆம் ஆண்டு கட்சி துவங்கிய விழா இன்று (செப்டம்பர் 14) தேதி நடைபெற்றது.

Advertisement

கட்சியின் 14 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி கட்சி தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடியுள்ளனர்.இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்களை நரி குறவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்ரையும் விஜயகாந்த அவர்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்னர். நீண்ட நாட்களுக்கு பின்னர் கேப்டன் அவர்களை பார்க்கும் ரசிகர்களும், தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருக்கின்றனர்.

Advertisement
Advertisement