பேருந்து கட்டணங்கள் அநியாய உயர்வினை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் பல அரசியல் கட்சிகளும் போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும், தேதிமுக சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது. பாமர மக்களுக்காக எப்போபோதும் இரக்க குணம் கொண்டு குரல் கொடுக்கும் கேப்டன் விஜயகாந்தும் கலந்துகொண்டார்.

நூதனமாக போராட்டம் நடந்த திட்டமிட்ட அவர், சென்னை பல்லாவரத்தில் போராட்டத்தை தனது கட்சி சார்பில் நடத்த தீர்மானித்தார். மேலும் இதற்காக ஆலந்தூரில் பஸ்சில் ஏறி பல்லாவரம் சென்று போராட்டத்தை நடத்தினார்.

Advertisement

Advertisement

ஆலந்தூரில் பஸ்ஸில் ஏறிய விஜயகாந்த், தற்போதைய அரசாங்கத்தை கேளி செய்யும் வகையில் ,நடத்துனரிடம் 500 ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் கேட்டுள்ளார். இதற்கு சில்லறை வேண்டும் என நடத்துனர் கூற. அதற்கு பதிலளித்த கேப்டன், தற்போதெல்லாம் பக்கத்தில் இருக்கும் ஊருக்கு செல்ல வேண்டுமானால் கண்டிப்பாக 500 ரூபாய் ஆகிவிடும்.

அதனால் தான் 500 ரூபாய் கொடுத்தேன், ஏன் என்றால் தற்போதைய பேருந்து கட்டணம் நிலைமை அப்படி என்று நடத்துனருக்கு பதில் அளித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

இவ்வாறு செல்லும் வழியில் நூதனமாக தனது எதிர்ப்பினை தெரிவித்து பல்லாவரம் சென்று பேச முடியாத நிலையிலும் தனது கட்சியுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார் கேப்டன்.

Advertisement