விஜய் மகன் சஞ்சையின் கனவு நிறைவேறப்போகிறது ! விரைவில் களத்தில் ஆட்டம் ?

0
2531
sanjay

தளபதி விஜய்க்கு திவ்யா என்ற மகளும் சஞ்சய் என்ற மகனும் உள்ளனர். விஜய் சிறு வயதில் சிறு சிறு வேடங்களில் நடித்தது போல் தனது மகன் சஞ்சயை வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் நடனமாட வைத்திருப்பார். அதே போல் தனது மகள் திவ்யாவையும் தெறி படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் தனது மகளாகவே காட்டியிருப்பார்.
sanjeevதற்போது மகன் சஞ்சய்க்கு சினிமாவை விட்டு வேறு ஒரு ஆசை வந்துள்ளது. சஞ்சய்க்கு சினிமாவை விட கிரிக்கெட் தான் மிகவும் பிடிக்குமாம். தற்போது சென்னையில் உள்ள ஒரு இன்டர்னேசனல் ஸ்கூலிள் படித்துவரும் அவர் அங்கு கிரிக்கெட் பயிற்சியும் பெற்று வருகிறார்.

தனது ஸ்கூலிங்கை முடித்தவுடன் தமிழக ரஞ்சி அணியில் கலந்து கொள்ள தேர்வில் பங்கேற்கவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.
sanjeevதற்போது 16 வயதே ஆன அவர் நன்றாக ஆடினால் இந்திய அணிக்கு தமிழகத்தில் இருந்து இன்னொரு வீரர் கிடைக்கலாம். நாம் அனைவரும் சேர்ந்து அவருக்கு ரசிகராக உற்சாக ப்படுத்தலாம்.