பிறந்தநாளை விட நண்பன் இழப்பு முக்கியம் என்று ஓடோடி வந்த சீயான் – நெகிழ்ந்த ரசிகர்கள். வீடியோ இதோ.

0
20656
vikram

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் இன்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் நேற்று (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நடிகர் வீட்டில் இருந்த போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டடு நெஞ்சிவலி ஏற்பட்டுள்ளது இதனால் அவரது குடும்பத்தினர் அவரை Sims மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்துள்ளதை கண்டு பிடித்தனர்.

இதையும் பாருங்க : எந்த தகப்பனுக்கும் வரக் கூடாத கஷ்டம் – தனது மகன் குறித்து மேடையில் கலங்கிய விவேக். வைரலாகும் வீடியோ இதோ.

- Advertisement -

இதனால் அவருக்கு, Catheterization எனப்படும் இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய ஸ்டென்ட் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.விவேக்கின் உடல் விம்ருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் விக்ரம், விவேக் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுளளார். விக்ரம் மற்றும் விவேக் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் இன்று விக்ரம் தனது 55 வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் விவேக் இறந்ததால் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விவேக்கின் இறுதி சடங்கில் கலந்து கொண்டுள்ளார். விவேக்கின் மறைவி அடுத்து இன்று விக்ரம் பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை என்று விக்ரம் ரசிகர்களும் முடிவு செய்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement