மற்ற நடிகர்கள் சமூக வலைதளத்தில் மட்டும் குரல் கொடுக்கும் நிலையில் கொரோனாவை ஒழிக்க தெருவில் களமிறங்கிய தமிழ் நடிகர்.

0
59883
vimal
- Advertisement -

கொரோனா வைரசினால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அழிந்து கொண்டு வருகிறார்கள். கொரோனா வைரஸை எதிர்த்து அரசாங்கம், காவல்துறை, மருத்துவர்கள் என அனைத்து துறையும் தங்களுடைய உயிரை கொடுத்து போராடி வருகிறார்கள். இந்த கொரோனா வைரஸ் மக்களை படாதபாடு படுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் இந்திய பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் கொரோனாவை ஒழிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து வருகிறது.

- Advertisement -

மேலும், இந்த ஊரடங்கு உத்தரவினால் நாடு முழுவதும் கடைகள், போக்குவரத்துக்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸை அழிக்க லட்சக்கணக்கான மருத்துவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்து வருகிறார்கள். திரை உலக பிரபலங்களும் மக்களுக்கு பல வகையில் உதவி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரபல நடிகர் விமல் அவர்கள் இந்த கொரோனா வைரஸை ஒழிக்க புதிதாக ஒரு முயற்சியில் இறங்கியுள்ளார். திருச்சி மாவட்டம், மாணப்பாறை அருகே உள்ள பன்னாங்கொம்பு கிராமத்தை சேர்ந்தவர் நடிகர் விமல். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நடிகர் விமல் அவர்கள் தன்னுடைய கிராமத்தில் உள்ள கிழக்கு தெரு, நடுத்தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் கிருமிநாசினி மருத்து அடித்து உள்ளார். நடிகர் விமல் அவர்கள் தானாகவே முன் வந்து தெருவில் இறங்கி மருந்து அடித்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

தெருக்களில் கிருமிநாசினி அடிப்பதன் மூலம் ஏரியாக்களை சுத்தம் செய்யும் முயற்சியில் நடிகர் விமல் அவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளார். ஏற்கனவே அந்த ஏரியா பகுதியில் நடக்கும் பொதுபிரச்சனைளுக்கும், மக்களின் தேவைகளுக்கும் தன்னால் ஆன உதவிகளை அவர் செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. இப்படி இவர் செய்யும் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது ட்விட்டரில் பதிவாகி உள்ளது. பொதுவாகவே பிரபலங்கள் தங்களால் முடிந்த பண உதவிகள் தான் செய்து வருகிறார்கள். ஆனால், நடிகர் விமல் அவர்கள் ஒருபடி இறங்கி மக்களுக்காக உயிர் கொல்லி கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதனால் மக்கள் அனைவரும் நடிகர் விமலை மனதார பாராட்டி வருகிறார்கள். சமீபத்தில் கூட ஆளில்லா விமானம் மூலம் தமிழ்நாடு முழுவதும் கிருமிநாசினி தெளிக்க அரசாங்கம் உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் கிருமிநாசினி தெளிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார்கள். சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் கொரோனா வைரசை ஒழிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

Advertisement