முத்து முத்தாக மூன்று பிள்ளைகளுடன் திருச்சந்தூர் முருகனை வழிபட்ட விமல் – அழிய குடும்ப புகைப்படங்கள்.

0
446
vimal
- Advertisement -

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் தான். அந்த வகையில் நடிகர் விமலும் ஒருவர்.நடிகர் விமல், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பொதுவாகவே இவருடைய படங்கள் அனைத்தும் குறைவான பட்ஜெட்டில் தான் இருக்கும். பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். இந்த களவாணி படத்தின் மூலம் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து நடிகர் விமல் தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, மஞ்சப்பை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இவருடைய நடிப்பில் களவாணி 2 படம் வெளியாகி இருந்தது. ஆனால், முதல் பாகம் அளவு இந்த பாகம் வரவேற்ப்பை பெறவில்லை .

- Advertisement -

நடிகர் விமல் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.இவரது திருமணம் களவாணி படத்தில் காண்பிக்கப்பட்டது போல தான் நடந்தது. நடிகர் விமல்,அக்ஷயா என்பவரை காதலித்தார். ஆனால், அவர்களின் வீட்டில் சம்மதிக்காததால் வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமல்ல அவரது மனைவி அக்ஷயா ஒரு மருத்துவர். மேலும், இவர் கொரோனா லாக்டவுனில் கூட தொடர்ந்து வேலை செய்து வந்தார்.

அதிலும் இவர் லாக் டவுன் சமயத்தில் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்த போதே கொரோனா நோயாளிகளுக்காக சேவை செய்தார். நிறை மாதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் மருத்துவமனை அவர்களுக்கு விடுமுறை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர் தொடர்ந்து சேவை செய்து இருக்கிறார். இதனால் இவரை மருத்துவமனையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டினார்கள்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருந்தது. விமலின் மனைவி மட்டும் டாக்டர் கிடையாது விமலும் டாக்டர் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நடிகர் விமலுக்கு அமெரிக்க தேசிய வணிக பல்கலைக்கழகம் இவருக்கு “கௌரவ டாக்டர் பட்டம்” வழங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தனது மூன்றாவது மகளின் பிறந்தநாளை கொண்டாடினார் விமல்.

இந்த நிலையில் நடிகர் விமல் தன்னுடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருப்பதாகவும் விமல் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement