தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விமலின் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் சார். இந்த படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்கியிருக்கிறார். இது இவருடைய இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விமல், சாயா தேவி, பருத்திவீரன் சரவணன், ரமா, சிராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. கல்வியை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
இந்த படம் மாங்கொல்லை என்ற ஊரில் 60 லிருந்து 80 காலகட்டத்தில் நடக்கும் கதை. அந்த ஊரில் உயர் ஜாதியை சேர்ந்த ஜெயபாலன் தலைவராக இருக்கிறார். இவர் அந்த ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவு பெற்று வாழ்வில் முன்னேற கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறார். தன்னுடைய ஜாதி பெருமை மட்டும் இல்லாமல் கடவுள் பக்தியையும் அந்த ஊர் மக்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்.
அதோடு இவர் அந்த ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்தை இடிப்பது தான் தன்னுடைய லட்சியமாக வைத்திருக்கிறார். இதை எதிர்த்து அந்த ஊருக்கு வாத்தியாராக அண்ணாதுரை வருகிறார். இவர் அந்த ஊர் மக்களுக்கு பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து கல்வி சொல்கிறார். அவர் தொடங்கிய அந்த ஆரம்பப் பள்ளியை அவருடைய மகன் சரவணன் நடுநிலைப் பள்ளியாக மாற்றுகிறார். சரவணனுடைய மகன் தான் விமல். இவர் இதை உயர்நிலைப் பள்ளியாக்கி ஊர் மக்களுக்கு கல்வி அறிவை கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.
காலங்கள், தலைமுறைகள் மாறினாலும் ஜாதியையும், கடவுள் மூடநம்பிக்கையும் அந்த ஊர் மக்களின் மத்தியிலிருந்து தகர்த்த முடியவில்லை. அது அவர்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கிறது. இதை எல்லாம் எதிர்த்து அந்த ஊர் மக்களை விமல் எப்படி முன்னேற்றுகிறார்? கல்வி அறிவை அவர்களுக்கு புகுத்தினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் ஞானம் என்ற கதாபாத்திரத்தில் விமல் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.
இவர் கல்வி போதிக்கும் ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கான தோற்றத்திலும் குணத்திலும் நடித்திருக்கிறார். இவரை அடுத்து படத்தில் சரவணன், சாயாதேவி ரமா, ஜெயபாலன் ஆகியோர் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்திற்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பக்க பலத்தை கொடுத்து இருக்கிறது. கல்வி இருந்தால் தான் இந்த சமூகம் முன்னேறும்.
சமூக முன்னேற்றத்திற்கு ஜாதி, கடவுளின் பெயரில் மூடநம்பிக்கையை தகர்க்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக இயக்குனர் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார். இருந்தாலும், கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம். சில அழுத்தமான காட்சிகளையும் ஏனோ தானோ என்று சொல்லியிருக்கிறார். சீரியஸான கதைகளத்தை இயக்குனர் ஆடல், பாடல், காதல் என்று காண்பித்திருப்பது தான் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தாத்தா, அப்பா, மகன் என்ற மூன்று தலைமுறைகளை காண்பிக்கும் விதத்தில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம். அது மட்டும் இல்லாமல் கல்வியறிவை பற்றி பேசும்போது அந்த ஊரில் என்ன விஷயம் மாறி இருக்கிறது என்பதை அழுத்தமாக காண்பித்திருக்கலாம். முதல் பாதி சொதப்பி இருந்தாலும் இரண்டாம் பாதியில் ஓரளவு நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் சார் படம் ரொம்ப சுமாராக இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
கதைக்களம் நன்றாக இருக்கிறது
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்
இரண்டாம் பதி ஓகே
குறை:
முதல் பாதி நன்றாக இல்லை
கதைக்களத்தை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் நிறைய கவனம் செலுத்தி இருக்க வேண்டும்
சில காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
சீரியஸான கதையில் இயக்குனர் காதல், பாடல் என்று கொண்டு சென்றிருப்பது சொதப்பல்
மொத்தத்தில் சார் படம் – பார்டரில் பாஸ்