‘எங்க தலைவர் பிறந்தநாள்ல பொறந்து இருக்கு, இந்தாங்க’ – இன்று பிறந்த குழந்தைக்கு விஷால் ரசிகர்கள் கொடுத்த பரிசு.

0
225
vishal
- Advertisement -

விஷாலின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே.

-விளம்பரம்-

ஆனால், இவர் அதற்கு முன்னரே 1989ல் நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளி வந்த ‘ஜாடிக்கேத்த மூடி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தான். அதற்கு பிறகு தான் இவர் செல்லமே என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இரும்புதிரை படத்திற்க்கு பின்னர் விஷால் நடிப்பில் வெளியான எந்த படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை.

- Advertisement -

விஷால் குறித்த தகவல்:

மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். அனைவரும் எதிர்பார்த்து இருந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் பிப்ரவரி மாதம் தான் வெளியாகி இருந்தது. இந்த படத்தை து.பா. சரவணன் இயக்கி இருக்கிறார்.

வீரமே வாகை சூடும் படம் :

இந்த படத்தை து.பா. பிலிம் ப்ரோடக்சன் சார்பாக விஷால் தயாரித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் டிம்பிள் ஹயாத்தி , யோகி பாபு, ரமணா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் அசாதாரண சூழ்நிலையை எப்படி கையாண்டு வெற்றி பெற்றார் என்பதே படத்தின் கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

லத்தி படம்:

இதனை அடுத்து விஷால் அவர்கள் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தங்களது ராணா புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இந்தப் படத்தின் போஸ்டர், டீசர் எல்லாம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் இன்று விஷாலின் பிறந்தநாள். இதற்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஷாலின் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் செய்தது:

விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் ஆதரவற்றை இல்லங்களில் உணவு வழங்கி இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷாலின் ரசிகர்கள் இந்த நற்செயலை செய்து வருகின்றார்கள். தற்போது இதற்கான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement