ஷாட்டில் எதிர் பாராமல் நடந்த சம்பவம் – கட் சொல்லாமல் சமாளித்துள்ள விவேக். இத நோட் பண்ணி இருக்க மாடீங்க.

0
23596
vivek
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை படப்பிடிப்பின் போது எதிர்பாராத தவறுகள் நடைபெறுவது வழக்கமான விஷயம் தான், அதனை எடிட்டிங்கில் சரி செய்து விடுவார்கள். ஆனால், ஒரு சில சீனில் அந்த தவறு ஸ்பாட்டிலேயே காட்சி ஏற்றார் போல மாட்டிக்கொள்வது நடிகர்களின் சாமர்த்தியம். அந்த வகையில் காட்சி கட் ஆகிவிட கூடாது என்பதற்காக விவேக்செய்த இந்த சாமர்த்தியமான வேலையை நீங்கள் நோட் செய்ய தவறி இருப்பீர்கள். தமிழக மக்களால் இருந்த சின்னக் கலைவானர் என்று போற்றப்பட்ட நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன் (ஏப்ரல் 17) காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார்.

இதையும் பாருங்க : அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் படு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்.

- Advertisement -

விவேக் நடிகர் பிரபுதேவாவின் பல்வேரு படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் பிரபுதேவாவுடன் விவேக் நடித்த ‘நினைவிருக்கும் வரை’ படத்தில் வந்த காமெடிகள் இன்றளவும் ரசிக்கும்படி தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சியில் எதிர்பாராமல் நடந்த சம்பவத்தை விவேக் எப்படி சமாளித்துள்ளார் என்பதை இந்த வீடியோ பார்த்தால் உங்களுக்கு நன்றாக தெரியும்.

ஆனால், இதை பலர் கவனித்து இருக்க வாய்ப்பில்லை. இந்த வீடியோவில் நடிகர் விவேக் ஆடிக்கொண்டு இருக்கும் போது அவரது சட்டை மேல் பாக்கெட் இருந்த செல் போன் எதிர் பாராதவிதமாக கீழே விழுந்துவிடும். அதனை சற்றும் எதிர் பாராத விவேக் பதறிப்போய் அந்த செல்போனை எடுத்து மீண்டும் சரி செய்ய முயற்சிப்பார். இதில் நீங்கள் நன்றாக கவனித்தால் தெரியும் விவேக், ‘ஐயோ’, ஐயோ என்று இந்த சீனில் பேசி இருக்க மாட்டார். அதனை டப்பிங் போது தான் பேசி இருப்பார்.

-விளம்பரம்-
Advertisement