நடிகர் விவேக்கின் மறைவு குறித்து உருக்கமுடன் பதிவிட்ட கமல் – (இந்தியன் 2 வரத்துக்குள்ள இப்படி ஆகிடிச்சே)

0
14714
kamal

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் இன்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.நடிகர் வீட்டில் இருந்த போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டடு நெஞ்சிவலி ஏற்பட்டுள்ளது இதனால் அவரது குடும்பத்தினர் அவரை Sims மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்துள்ளதை கண்டு பிடித்தனர்.

Image

இதனால் அவருக்கு, Catheterization எனப்படும் இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய ஸ்டென்ட் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.விவேக்கின் உடல் விம்ருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் பாருங்க : வெளியே சிரிப்பு, உள்ளே சோகம் – 5 வருடமாக மகனின் இழப்பை நினைத்து தவித்துள்ள விவேக்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விவேக்குடன் ஒரு படத்தில் கூட நடிக்காத நடிகர் கமல் ஹாசன், விவேக் மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் விவேக் நேற்று (ஏப்ரல் 16) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் தான் மாரடைப்பு ஏற்பட்டு விட்டது என்று சர்ச்சைகள் கிளம்பியது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்த கமல், கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.

-விளம்பரம்-

அவரது உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம் என்று பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக் இதுவரை கமலுடன் நடித்தது இல்லை, இந்தியன் 2 வில் விவேக் நடிப்பதாக இருந்தது. ஆனால், அது நிறைவேறும் முன்னர் விவேக் மண்ணை விட்டு பிரிந்துள்ளது தான் சோகம்.

Advertisement