தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். இவரின் காமெடியில் நகைச்சுவையும், சமூக சிந்தனையும் இருக்கும். அதனால் தான் இவரை மக்கள் ‘சின்ன கலைவாணர்’ என்று அழைத்து வருகின்றனர். இவர் மேடை நகைச்சுவை கலைஞராக தான் தனது பயணத்தை தொடங்கினார்.

இவர் 1987 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.மேலும், விவேக் எப்பொழுதுமே ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். நாட்டு நடப்பு, சினிமா என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார். இந்த நிலையில் நடிகர் விவேக்கின் தாயார் இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வெளியானது.

Advertisement

ஆனால் உண்மையில் நடிகர் விவேக்கின் தாயார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி இறந்துவிட்டார் என்பது தான் இப்படி ஒரு நிலையில்தான் விவேக்கின் தாயார் சமீபத்தில் இறந்து விட்டதாக பலரும் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். ட்விட்டர் வாசி ஒருவர் இதற்கு நடிகர் விவேக் சார் அவர்களின் தாயார்2019ல் இறந்துவிட்டார் ஆனால் நேற்று இரவுதான் இறந்ததாக பொய்யான தகவல் பரப்பபடுகிறது என்ன ஏது எப்போஎன்று சரியாக தெரியாமல் பல பொய்யான தகவல்கள் பரப்பபடுகிறது.

ஒரு தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்று சொன்னால் எதையுமே யோசிக்காமல் ஷேர் பண்றாங்க என்று பதிவிட்டுள்ளார். என் தாயார் இயற்கை எய்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது.ஆனால் செய்தி பரப்புவோருக்கு அவர் மேல் அவ்வளவு அலாதி பிரியம் போலும்.இந்த வருடமும் இயற்கை எய்த வைக்கிறார்கள்.போகட்டும் விடுங்கள்.எனக்கு என் அம்மா என்னுடன் தான் இருக்கிறார்.

Advertisement
Advertisement