தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்த முக்கிய நடிகர் – அப்போ அந்த விஷயம் செமையா இருக்கும்.

0
806
vijay65
- Advertisement -

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் தனது 65 படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் நாயகி பற்றிய அப்டேட் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹேக்டே கமிட் ஆகி இருக்கிறார். இதை தவிர இந்த படத்தில் பணிபுரியம் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் யோகி பாபு தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். காமெடியனாக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் யோகி பாபு ‘தர்ம பிரபு, கூர்கா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். தற்போது, யோகி பாபுவின் கால்ஷீட் டைரியில் பிரபல நடிகர்களின் படங்களும் வரிசையாக உள்ளது. அதுபோக, ஹீரோவாக பன்னி குட்டி, காக்டெய்ல்’ என அடுத்தடுத்து படங்கள் வைத்திருக்கிறார் யோகி பாபு.

- Advertisement -

இதில் ‘காக்டெய்ல்’ என்ற படத்தில் யோகி பாபுவிற்கு ஜோடியாக ராஷ்மி கோபிநாத் நடித்திருக்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யோகி பாபுவிடம் சமீபத்தில் ரசிகர் ஒருவர் தளபதி 65 படத்தில் நீங்க இருக்கீங்ககளா என்று கேட்டிருந்தார். இதற்கு யோகி பாபு ஆம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே யோகி பாபு விஜய்யின் சர்க்கார், பிகில் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இதனால் விஜய் 65 படத்தில் காமடிக்கு பஞ்சம் இருக்காது.

இதுபுறம் இருக்க, தளபதி 65 படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் அவர் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பதாகவும், இதுகுறித்த பேச்சு வார்த்தைகள் படு மும்மரமாக நடைபெற்று வருவதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை இது உண்மையானால் மாஸ்டர் படத்தில் வந்த பவானி கேரக்டரை விட தளபதி 65 வில்லன் கேரக்டர் வெறித்தனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-விளம்பரம்-
Advertisement