சிம்பிளாக கோவிலில் முடிந்த யோகி பாபுவின் திருமணம். மணமக்கள் ஜோடியின் புகைப்படம் இதோ.

0
32980
yogibabu
- Advertisement -

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக் தலைமுறைக்கு பின்னர் தற்போது முன்னணி காமெடியனாக விளங்கி வருவது நடிகர் யோகிபாபு தான். ஆரம்பத்தில் ஒரு சில துணை காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 19 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு.

-விளம்பரம்-

சமீபத்தில் யோகி பாபுவிற்கு திருமணம் என்று வதந்திகள் பரவியது. ஆனால், அது பொய் என்றும் கூறி இருந்தார் யோகி பாபு. தற்போது ஒரு வழியாக யோகி பாபுவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்த யோகி பாபு, வீட்டில் எல்லோரும் சேர்ந்து பார்த்த பெண் தான், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். எனக்கு மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கிற அனைவருக்கும் பிடித்துவிட்டது. எனக்கு மனைவியாக வரப் போகிறவர்கள் என்னை மட்டுமில்லாமல் அம்மா தங்கை என்று என் மொத்த குடும்பத்தினரும் அக்கறையுடன் கவனித்துக் கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன்.

- Advertisement -

அப்படியோரு குணத்திலேயே ஒரு பெண் கிடைத்து விட்டார்கள்,நானும் மாப்பிள்ளை ஆகிவிட்டேன் என்று கூறியிருந்தார். அதனை நமது வலைதளத்தில் கூட பதிவிட்டிருந்தோம். இந்த நிலையில் சென்னையில் உள்ள யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக திருமணம் நிறைவடைந்துள்ளது. இந்த திருமணத்தில்திரைபிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. நெருங்கிய உறவினர் மற்றும் சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள யோகி பாபு, இன்று காலை (05.02.2020) எனது குலதெய்வ கோவிலில் வைத்து மஞ்சுபார்கவிக்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றது என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். திருமணம் சிம்பிளாக நடந்தாலும் ரிசாப்ஷனை வெகு சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதில் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement