யோகி பாபுவுக்கு திருமணமா..? யார் இந்த பெண்..? வைரலாகும் மணக்கோல புகைப்படம்..!

0
574
yogi babu

தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் வருகின்றனர். இதில் யோகி பாபு தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றனர். இதில் காமெடிய நடிகர் யோகி பாபு சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” என்ற படத்தில் நயன்தாராவை காதலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்நது தற்போது “குர்கா” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

4monkeys தயாரிக்கும் இந்த படத்தை ”எனக்கு இன்னொரு பேர் இருக்கும்” என்ற படத்தை இயக்கிய சாம் ஆன்டன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார்.அதே போல தனது ட்விட்டர் பக்கத்தில் யோகி பாபுவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும், இந்த படத்தில் நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவலும் வொயாகி இருந்தது.

ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்த நடிகர் யோகி பாபு, இந்த படத்தில் தான் ஹீரோவாக நடிக்கவில்லை என்றும், இந்த படத்தில் ஒரு வாட்ச்மேன் கதாபத்திரத்தில் நடித்துள்ளாதகவும் இந்த படத்தின் கதை உருவாக்கிய போது இயக்குனர் என்னை மனதில் வைத்துத்தான் இந்த எழுதினார் என்றும் தெறிவிதிருந்தார்.ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது யோகி பாபுவிற்கு கொஞ்சம் காமெடியான ரொமான்ஸ் காட்சிகளும் இருக்கும் என்பது போலவே தோன்றுகிறது.

yogi

இந்த படத்தில் ஒரு நாய் மற்றும் வெளிநாட்டுக்காரரை மையமாக வைத்துதான் கதை. அவர்கள் வழிமாறி வந்து யோகி பாபுவிடம் மாட்டிக் கொள்கின்றனர். எப்போதும் போல நடிகர் யோகி பாபு இந்த படத்திலும் காமெடி கேரக்டரில்தான் நடித்துள்ளாராம்.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் அந்த வெளிநாட்டு பெண்மணி மற்றும் நாய்தான். மேலும், இந்த படத்தில் ஒரு ‘கூர்கா’ கேரக்டரில் நடித்துள்ளார் யோகி பாபு என்பது குறிப்பிடத்தக்கது.