பள்ளி படிக்கும் போது கிரிக்கெட் டீமில் யோகி பாபு. எப்படி இருக்கார் பாருங்க.

0
30731

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி காமெடி நடிகராக அதிக புகழையும், பிரபலத்தையும் சம்பாதித்தவர் யோகி பாபு. ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தற்போது ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் கலக்கி கொண்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். யோகி பாபுவின் ஹேர்ஸ்டைல், அவர் உடல் தோற்றம், டைமிங் வசனங்கள் தான் அவருக்கு சிறப்பு.

இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும், யோகி பாபுவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் யோகி பாபு தன்னுடைய சின்ன வயதில் எப்படி இருப்பார் தெரியுமா? அவரே தனது பள்ளி பருவ புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

சமீப காலமாகவே நடிகர்கள் தங்களது சிறு வயது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட விஜய்யின் பள்ளிப்பருவ புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அந்த வகையில் தற்போது நடிகர் யோகி பாபுவும் தன்னுடைய பள்ளி பருவ புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படம் மாநில அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற போது எடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்தப் புகைப்படத்தில் யோகி பாபு யார் என்று பலர் குழம்பிப்போயிருக்கின்றனர். இந்த புகைப்படத்தில் கீழே அமர்ந்திருப்பவர்களில் (இடமிருந்து வலமாக) இரண்டாவதாக இருப்பவர் தான் யோகி பாபு என்று சிலர் கண்டு பிடித்து விட்டனர். அப்போது கூட அவர் முடியை வைத்து தான் பலரும் கண்டு பிடித்தனர்.

Advertisement