சமூக சேவையில் குதித்த யோகி பாபு ரசிகர்கள். இந்த பணி தொடரும்.

0
819
- Advertisement -

சர்வதேச அளவில் இந்த கரோனா வைரஸை எதிர்த்து தீவிரமாக போராடி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் 650 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் தமிழக்தில் இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரசினால் 24 ஆயிரத்திற்கும் மேல் பலியாகியுள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும், அதிக காய்ச்சல், அதிக இருமல், மூச்சுத்திணறல் இவையெல்லாம் தான் கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

- Advertisement -

இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆகவே தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். அதோடு சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரபலங்களும் தங்களால் முடிந்த பண உதவிகளையும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் யோகி பாபு ரசிகர்கள் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு செய்து உள்ளார்கள். சென்னையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பணியிலும், பாதுகாப்பு பணியிலும் தன்னலம் பார்க்காமல், நேரம் காலம் பார்க்காமல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறை ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு மாஸ்க் வாங்கி கொடுத்து தங்களால் இயன்ற சமூக சேவையை தொடங்கி இருக்கிறார்கள் யோகி பாபு ரசிகர்கள்.

-விளம்பரம்-

சென்னையில் மட்டும் 2,000 பேருக்கும் மாஸ்க் வழங்கியிருக்கிறார்கள். இந்த பணி மேலும் தொடரும் என்று கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே தேனீ மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்தரன் தேஜ்ஸ்வினியை நேரில் சந்தித்து விஜய் ரசிகர்கள் 200 மாஸ்க்குகளை வழங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலங்கள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்து வருகிறார்கள்.

இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசாங்கம், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என பல பேர் தங்களுடைய குடும்பங்களை மறந்தும், உயிரை பணய வைத்தும் இந்த கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர்

Advertisement